இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
துலாக்கோல்
போல் எதையும் சீர்தூக்கி எடை போடும் தூய்மையான இதயம் கொண்ட துலா ராசி நேயர்களே !
இதுவரை
தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இதற்குமேல்
தைரிய வீரிய ஸ்தானத்திற்கு இடம் பெயர்கின்றார். தங்களின் முயற்சிக்கு ஏற்ப பல
முன்னேற்றங்களை காண்பீர்கள். பணியில் நேர்மையை கடைபிடிப்பதன் பலனாக புகழின்
உச்சத்தை அடைவீர்கள்.
இயற்கை
சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து சப்தம பாக்ய மற்றும் லாப ஸ்தானத்தையும்
பார்க்கின்றார். இளைய சகோதரர்களின் உதவிக்கரம் உங்களை அரவணைக்கும். காது
சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். திருமணம்
சம்பந்தமான செயல்பாடுகளை தீவிரப்படுத்துவதன் மூலம் திருமண யோகம் கைகூடும்.
தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷமான குடும்ப சூழல்
அமையும்.
நீண்ட
கால ஆசைகள் நிறைவேறும். ஆலய திருப்பணியை முன்னின்று செயல்படுத்தும் வாய்ப்புகள்
அமையும். புனித யாத்திரை சென்று வருவீர்கள். பெரியோர்கள் மற்றும் மகான்களின்
தரிசனமும், ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று
பணி அமர்வு ஏற்படும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
பணியிட
பயிற்சியுடன் கூடிய பணி உயர்வு ஏற்படும். புதிய செயல்திட்டங்களை உருவாக்கி
சாதித்து காட்டுவதற்கு உரிய சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு
மனமகிழ்ச்சியை அளிக்கும். பணி நிறைவு பெற்றவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும்.
சிலருக்கு தலைமைப் பதவி ஏற்று ஆலயப் பணிகள் மற்றும் தர்ம ஸ்தாபனங்களை நிர்வாகம்
செய்வதற்கான சூழல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் உண்டாகும். மக்கள் தொடர்பு
பணியில் உள்ளவர்களுக்கு மக்களிடையே நன்மதிப்பும், புகழும் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
சிறு
மற்றும் குறு தொழில் செய்யும் பெண்களுக்கு தொழிலில் இருந்துவந்த தடைகளை தகர்த்து
முன்னேற்றம் காண்பீர்கள். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த மனக்கவலைகள்
தீர்ந்து சுபிட்சம் உண்டாகும். மூத்த சகோதரர் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும்.
மனதிற்கு விரும்பிய ஆடை, ஆபரண சேர்க்கை சிறப்பாக இருக்கும். உத்தியோகம் சார்ந்த
சிறுதூர பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள்
அதிகரிக்கும். செய்யும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவுகள் மனதிற்கு புது
நம்பிக்கையை அளிக்கும்.
கலைஞர்களுக்கு :
போட்டி
பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள். போட்டித் தேர்வுகளில்
பங்கேற்று தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கைகூடும்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதன்மை மதிப்பெண்கள் பெறும் சூழல் உண்டாகும்.
ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதன் மூலம் பரிசுகளும், பாராட்டுகளும்
தேடிவரும். அயல்நாடுகளில் சென்று மேற்கல்வி பயில்வதற்கு முயற்சி செய்வோர்க்கு
அனுகூலமான காலமாகும்.
விவசாயிகளுக்கு :
உங்களின்
நிர்வாகத்திறமை வெளிப்பட்டு தலைமையிடத்தில் நற்பெயர் உண்டாகும்.
பொதுக்கூட்டங்களில் உங்களின் பேச்சாற்றல் மூலம் மக்களின் மனதை கவர்வீர்கள். பொது
தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை நடத்துபவர்கள் நற்பெயரும், புகழும்
அடைவார்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மூலம் தெளிவான சிந்தனைகள் உண்டாகும்.
தங்களின் அரசியல் பணிக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு நிறைவாக அமையும்.
புது விதமான யுத்திகளால் பல தடைகளை வெற்றி கொள்வீர்கள்.
பெண்களுக்கு :
கடுகு
உளுந்து போன்ற தானியப் பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு விளைச்சல் மற்றும் லாப
நிலை சிறப்பாக இருக்கும். நீர்ப்பாசன நிலை தேவைக்கேற்ப கை கொடுக்கும். வரப்பில்
உள்ள நடைப்பாதை பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். மஞ்சள், கரும்பு,
வாழை போன்ற பயிர்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எண்ணெய் வித்துக்களில்
முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார லாபம் பெறுவீர்கள். உங்கள் சிந்தனைகளை புதிய
முயற்சிகளில் ஈடுபடுத்துவதன் மூலம் பல சிறப்புகளை அடைவீர்கள்.
மாணவர்களுக்கு :
அயல்நாட்டு
பயணங்கள் மூலம் பல சிறப்பான சூழல் உண்டாகும். கலைகள் சார்ந்த அறிவு மேலோங்கும்.
உங்களின் போட்டியாளர்களை வெற்றி கொண்டு சாதனை படைப்பீர்கள். பொருளாதார நிலை உயரும்.
கதை எழுதுபவர்களுக்கு தங்களின் படைப்புகளுக்கான விருதும், அங்கீகாரமும்
கிடைக்கும். மலை நாட்டு இடங்களுக்கு சென்று வருவதினால் மாற்றமான சிந்தனைகள்
உண்டாகும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில்
புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். ஜவுளி, வர்த்தகம் செய்யும் வியாபாரிகள்
தொழிலில் வெற்றிக்கொடி நாட்டுவார்கள். சர்வதேச வணிகம் மற்றும் ஏற்றுமதி தொழிலில்
விருப்பம் உண்டாகும். இதற்கு முன்னர் ஏற்றுமதி தொழிலில் உள்ளவர்கள் சிறப்பான
நிலையை எட்டுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இல்லாமல் தொழிலை தொடரும்
சூழல் உண்டாகும். சிலருக்கு தந்தையின் தொழிலையும் ஏற்று நடத்தும் வாய்ப்புகள்
அமையும். வங்கி கடனுதவி குறித்த நேரத்தில் கைக்கு வந்து சேரும்.
வழிபாடு :
திங்கட்கிழமைதோறும்
சிவபெருமானுக்கு வில்வ இலைகள் வைத்து ஆராதனை செய்வதன் மூலம் மனதில்
தன்னபிக்கையும், மகிழ்ச்சிகரமானம் உணர்வு உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக