இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கூகுள்
மேப்ஸ் பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர்.குறிப்பாக
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை அதிகமாய் கூகுள் மேப்ஸ் வசதியை
பயன்படுத்துகின்றனர். தெரியாத இடங்களுக்கு கூட நம்மை சுலபமாக அழைத்துச் செல்லும்
ஒரு நண்பனாக இந்த கூகுள் மேப்ஸ் செயல்படுகிறது.
கூகுள் மேப்ஸ் வசதி
விரைவில்
கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் வசதியில் பல்வேறு புதிய வசதிகளை சேர்க்க
திட்டமிட்டுள்ளது, அப்படி புதிய அம்சம் வந்தால் இன்னமும் எளிமையான முறையில் இந்த
கூகுள் மேப்ஸ் வசதியை பயன்படுத்த முடியும்.
இந்நிலையில்
கடந்த 1997-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதியன்று ஃபுளோரிடாவின் லான்டனாவில் வில்லியம்
மோல்ட் என்ற நபர் காணமல் போனர். அப்போது அவருக்கு வயது 40 என்றுகூறப்படுகிறது.
குறிப்பாக ஒர் இரவு விடுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என்று
கூறப்படுகிறது.
விசாரணை தொடங்கியது
வில்லியம் காணவில்லை
என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டு பின்பு விசாரணை தொடங்கியது, ஆனாலும் அவரை
கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு விசாரணையிலும் எந்த முன்னேற்றம் இல்லை. மேலும்
22-ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 28-ம் தேதியன்று வெலிங்டன் பகுதியில் ஓர் ஏரி அருகே
நீரில் மூழ்கிய கார் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
காரை கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்தனர்
நீரில்
இருந்து அந்த காரை மீட்டெடுத்தனர்,அதன் உள்ளே மனித எலும்புகூடு இருந்து
கண்டறியப்பட்டது. இந்த பகுதியில் முன்னர் வசித்த ஒருவர் தான், கூகுள் மேப்ஸ் மூலம்
வில்லியமின் நீரில் மூழ்கிய காரை கண்டறிந்ததாக
போலீசார் தெரிவித்தனர்.
வைரல்:
தகனம் செய்தபின் மீண்டும் உயிருடன் வந்து ஷாக் கொடுத்த நபர்!
கூகுள் மேப்ஸ் மூலம் கண்டறிந்த நபர், அப்பகுதியில்
வசிக்கும் தன் நண்பரை தொடர்பு கொண்டிருக்கிறார், அவர் தனது ட்ரோன் கேமரா மூலம் ஏரி
நீரில் ஒரு கார் மூழ்கிய நிலையில் இருப்பதை கண்டறிந்துள்ளார். பிறகு இது தொடர்பாக
போலீசாரை தொடர்புகொண்டார். பின்பு போலீசார் காரை மீட்டு உடல் எச்சங்களை
மீட்டுள்ளனர். வில்லியமின் குடும்பத்துக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
22ஆண்டுகளுக்கு பிறகு
குறிப்பாக
காணாமல் போன இரவு 9.30மணிக்கு, தனது பெண் தோழியை அழைத்து விரைவாக வீடு
திரும்புகிறேன் என்று போனில் கூறியுள்ளார். இந்நிலையில் வில்லியம் 22ஆண்டுகளுக்கு
பிறகு கூகுள் மேப்ஸ் மூலம் உடல் எச்சங்களாக கண்டறியப்பட்டுள்ளது என்பது வியப்பை
ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக