Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 14 செப்டம்பர், 2019

தேனாம்பேட்டை மீட்டிங்கில் நடந்தது என்ன?- பெண் தொழிலதிபர் ரீட்டா தற்கொலையில் புதிய தகவல்கள்

 Image result for தொழிலதிபர் ரீட்டா
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சென்னை நுங்கம்பாக்கம், கோத்தாரி சாலையில் உள்ள பங்களா வீட்டில் குடியிருப்பவர் லங்கா லிங்கம். இவர், பிரபலமான கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரின் மனைவி ரீட்டா (49), இணை நிர்வாக இயக்குநராக இருந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் சென்னையில் உள்ளார். மகள், வெளிநாட்டில் இருக்கிறார்.
இந்தநிலையில், ரீட்டா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வீட்டின் மேற்பார்வையாளர் ஏசுபாதம் கொடுத்த தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் சுகுனாசிங், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியன் மற்றும் போலீஸார், ரீட்டா தற்கொலை செய்து கொண்ட அறையில் சோதனை நடத்தினர். அப்போது, ஜன்னல் திரையைக் கொண்டு ரீட்டா, தற்கொலை செய்தது தெரியவந்தது. அவரின் செல்போனில் ரீட்டா கடைசியாக யாரிடம் பேசினார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
ரீட்டா தற்கொலை செய்யப்பட்ட தகவல் அந்தக் குடும்பத்தினரை மட்டுமல்ல கார் ஷோரூம் ஊழியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்குப்பிறகு ரீட்டாவின் சடலம், அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி அஞ்சலிக்குப் பிறகு அவரின் சடலம், பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
ரீட்டா தற்கொலை குறித்து நுங்கம்பாக்கம் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``இதுவரை நடந்த விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடந்த மீட்டிங்கில் லங்கா லிங்கமும் அவரின் மனைவி ரீட்டாவும் பங்கேற்றுள்ளனர். அப்போது கார் விற்பனையகத்தின் மேலாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர். மீட்டிங்கில் ஆட்டோ மொபைல் துறை சந்தித்துவரும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது ரீட்டா, கார் விற்பனை குறித்து ஆலோசித்துள்ளார். அதில், ரீட்டா கோபமாகப் பேசியுள்ளார். அதற்காக ரீட்டாவை லங்கா லிங்கம் கண்டித்துள்ளார்.
கூட்டம் முடிந்தபிறகு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். ஆனால், லங்கா லிங்கம் வீட்டுக்குள் செல்லவில்லை. நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார். ரீட்டா மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். அப்போதுதான் அவர் தற்கொலை செய்துள்ளார். லங்கா லிங்கத்திடம் ரீட்டா தற்கொலை குறித்து விசாரித்தபோது அவர், தேனாம்பேட்டையில் நடந்த மீட்டிங்கில், வீட்டுக்குச் சென்றபோது நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
இதையடுத்து ரீட்டா தற்கொலையை முதலில் பார்த்த வீட்டின் மேற்பார்வையாளர் ஏசுபாதத்திடம் விசாரணை நடத்தியபோது அவர், `வீட்டுக்கு காலையில் வந்தபோது ரீட்டாவின் அறைக் கதவு திறக்கப்படவில்லை. இதனால்தான் நீண்ட நேரம் கதவை தட்டினேன். அப்போதும் கதவு திறக்கப்படவில்லை. இதனால்தான் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தபோது தூக்கில் ரீட்டா தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக காவல் நிலையத்துக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தேன்' என்று கூறினார்.
தேனாம்பேட்டையில் நடந்த மீட்டிங்கில் பங்கேற்ற விற்பனையகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் அன்றைய தினம் நடந்த மீட்டிங் குறித்த விவரங்களைத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ரீட்டாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களும் தற்கொலை செய்துகொண்டதற்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் ரீட்டாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.
REETA HOME
போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு,`` பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் ரீட்டா தற்கொலைக்கான காரணம் தெரியவரும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக ரீட்டா தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது" என்றார்.
லங்கா லிங்கத்தின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரம். சென்னை கோயம்பேட்டில் சொகுசு கார் நிறுவனத்தின் விற்பனை ஷோரூமை நடத்தினார். இந்த கார் ஷோரூமின் தலைமை அலுவலகம் தேனாம்பேட்டையில் உள்ளது. கார் விற்பனையில் லங்கா லிங்கம் கோலோச்சியதற்கு அவரின் மனைவியும் முக்கிய காரணம்.
ஒவ்வொரு புதிய வரவு கார் அறிமுகத்தின்போதும் லங்கா லிங்கம் தன்னம்பிக்கையுடன் பேசுவார். ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி குறித்து லங்கா லிங்கம் பேசும்போது தங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியிருந்தார். இந்தச் சமயத்தில்தான் மீட்டிங் முடிந்த மறுநாள் ரீட்டா தற்கொலை செய்துள்ளார். அவர் எடுத்த இந்த முடிவு அவரைச் சார்ந்துள்ளவர்களைப் பெரிதும் பாதித்துள்ளது.
லங்கா லிங்கமும் ரீட்டாவும் இரண்டு கண்களைப் போல கார் ஷோரூம் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள். ரீட்டா, யோகா, காரத்தே, டான்ஸ் என எப்போதும் சுறுசுறுப்பாகவே வலம் வந்தவர். அவர் எப்படி இப்படியொரு முடிவை எடுத்தார் என்ற கேள்வி அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஊழியர்களுக்கும் எழுந்துள்ளது. ரீட்டாவின் சடலத்தைப் பார்த்து ஊழியர்களும் உறவினர்களும் கதறி அழுதனர். லங்கா லிங்கத்துக்கும் அவரின் மகனுக்கும் ஆறுதல் கூறினர்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக