இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சியோமி நிறுவனத்தின் அனைத்து டிவி மாடல்களுக்கு இந்தியாவில்
நல்ல வரவேற்ப்பு உள்ளது, இதை வைத்து அதிக வருமானத்தை இந்தியாவில் பெருகிறது சியோமி
நிறுவனம். இந்நிலையில் சியோமி நிறுவனம் மலிவு விலையில் மி Full Screen 43-இன்ச்,
55-இன்ச் 65-இன்ச் 4கே டிவி மாடல்களை சீனாவில் மலிவு அறிமுகம் செய்துள்ளது.
8கே வீடியோ பிளே பேக்
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் 8கே வீடியோ பிளே பேக்
ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், பின்பு
துல்லியமான வீடியோக்களை பார்க்க அனுமதிக்கும். மேலும் இந்த சாதனங்களைப் பற்றிய
முழுவிபரங்களைப் பார்ப்போம்.
எச்டிஆர் 10 ஆதரவு
சியோமியின் மி Full Screen 43-இன்ச், 55-இன்ச் 65-இன்ச்
ஸ்மார்ட் டிவி மாடல்கள் பொதுவாக 3840 X 2160பிக்சல் திர்மானம் மற்றும் 178 டிகிரி
கோணங்களை ஆதரிக்கிறது. பின்பு எச்டிஆர் 10 ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்
டிவிகள்வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
32ஜிபி உள்ளடக்க மெமரி
சியோமியின் மி Full Screen 43-இன்ச், 55-இன்ச் 65-இன்ச்
ஸ்மார்ட் டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன்
வெளிவந்துள்ளது. மேலும் 9-ஜென் பட செயலாக்க இயந்திரத்துடன் இயக்கப்பட்ட 8கே வீடியோ
பிளேபேக்கை ஆதரிக்கின்றன.
மென்பொருள் வசதி
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சியோமி புதிய ஸ்மார்ட்
டிவிகள் 1.9ஜிகாஹெர்ட் அம்லோஜிக் கார்டெக்ஸ் குவாட்-கோர் ஏ55 டிஎன்972 12என்எம்
பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு எப்போதும் போல பேட்ச்வால் ஆதரவு கொண்ட
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளாகவெளிவந்துள்ளது இந்த புதிய
சியோமி டிவிகள்.
ஆடியோ மற்றும் இணைப்பு ஆதரவுகள்
இந்த சாதனங்களில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ
மற்றும் டால்பி ஆடியோ இடம்பெற்றுள்ளன. பின்பு எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு
யூ.எஸ்.பி போர்ட்கள், ஈதர்நெட், வைஃபை மற்றும் புளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு
ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
அட்டகாசமான விலை
மி Full Screen 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 1499 yuan:
இந்திய மதிப்பில் ரூ.14,930-ஆக உள்ளது.
மி Full Screen 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 2399 yuan:
இந்திய மதிப்பில் ரூ.23,800-ஆக உள்ளது.
மி Full Screen 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 3399 yuan:
இந்திய மதிப்பில் ரூ.34,000-ஆக உள்ளது.
அதன்படி சியோமி நிறுவனம் இப்போது சீனாவில் அறிமுகம்
செய்துள்ள ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் மலிவு விலையில் வெளிவருமா என பல்வேறு
மக்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக