Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 செப்டம்பர், 2019

மேஷ ராசியில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்யலாம்?

Image result for மேஷ ராசியில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்யலாம்?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



முயற்சி இருந்தால் எந்த ஒரு தொழிலும் சாதனையை படைக்கலாம். 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்கிறது ஆன்றோர் மொழி. எனினும், 'எனது சொந்த ராசிப்படி நான் என்ன தொழில் செய்யலாம்? அல்லது செய்தால் ஓரளவு வெற்றி பெற முடியும்?’ என்று கேட்பவர்களுக்காக நான் ராசி அடிப்படையில் சில தொழில் ஆலோசனைகளை அளித்து உள்ளேன். உங்கள் சொந்த ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் நன்றாக வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் தாராளமாக கீழ்கண்ட தொழில்களை நீங்கள் செய்யலாம். அந்த விவரங்கள் வருமாறு...
மேஷ ராசிக் காரர்கள் பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாக கொண்டு பிறந்தவர்கள். அந்த வகையில் ரியல் எஸ்டேட், வீடு (அல்லது வீட்டின் மூலம் வாடகை), நிலம், விவசாயம், தீயணைப்புத் துறை, ராணுவம், சர்க்கஸ் அல்லது வேறு ஏதேனும் சாகச தொழில் (சிலம்பம், குத்துச் சண்டை போன்றவைகள்), தோப்புகள் மூலம் வருமானம் பெறுதல், மின் வாரியங்கள், சமையல் தொழில் (அல்லது நெருப்பின் மூலம் பிழைக்கும் தொழில்கள் - காஸ், எரிபொருள் விற்பனைகள்), பயங்கர கருவிகளை தயார் செய்யும் தொழிற்சாலைகள், பொறியியல், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் அல்லது நிபுணர் (இது போல ரத்தம் பார்க்கும் வேறு தொழில்கள் அதாவது ஆய்வுகூடத்தில் பரிசோதகர் போன்றவைகளை சொல்கிறேன்) என ஏதாவது ஒரு துறையில் இவர்கள் இருப்பது நன்மையை செய்யும். மற்ற துறைகளில் விதி வசத்தால் இருந்தால் பெரிய லாபகங்களை பெற இயலாது. அதே போல சொந்தத் தொழில் செய்யலாமா என்பதை ஜாதகத்தில் இருக்கும் 10 ஆம் இடத்தைக் கொண்டு தீர்மானிக்கவும். சொந்தத் தொழில் செய்து பிறர்க்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி உச்சம் அல்லது வேறு ஏதேனும் வகையில் வலுவாக சுப பலம் பெற்று இருத்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக