இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஸ்விகே
நிறுவனம் புதிதாக ஸ்விகி கோ (Swiggy Go) என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்விகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவையின் படி பயனர்கள்
அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து விதமான சிறு சிறு வேலைகளையும் ஸ்விகி கோ மூலம்
செய்து கொள்ளலாம்.
டன்சோவிற்கு
போட்டியாக ஸ்விகி கோ
இதற்கு
முன்பே டன்சோ (Dunzo) என்ற நிறுவனம், இந்த 'பிக்கப் அண்ட் டிராப்' சேவையை இந்தியாவில்
செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்விகி நிறுவனமும், இந்த பிக்கப் அண்ட்
டிராப் சேவையை ஸ்விகி கோ என்ற பெயரில் துவங்கி உள்ளது.300 நகரங்களில் ஸ்விகி கோ சேவை
துவக்கக் கட்டமாக ஸ்விகி கோ சேவை, முதலில் பெங்களூர் நகரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று ஸ்விகி நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள 300 நகரங்களில் ஸ்விகி கோ சேவை 2020 ஆம் ஆண்டிற்குள் தொடங்கப்படும் என்றும் ஸ்விகி நிறுவனம் அறிவித்துள்ளது.வீட்டுச் சாவியை கூட டோர் டெலிவரி செய்யலாம்
இந்த ஸ்விகி
கோ சேவையைப் பயன்படுத்தி மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து
கொள்ளலாம். உதாரணத்திற்கு அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு வீட்டிலிருந்து சாப்பாட்டை
பார்சல் அனுப்பலாம் அல்லது உங்களுக்குத் தேவையான மருந்துக் கடையிலிருந்து மருந்து
வாங்கி வரச் சொல்லலாம் அல்லது உங்கள் நண்பரிடம் இருக்கும் உங்கள் வீட்டுச் சாவியை
வாங்கி வரச்சொல்லிக் கூட ஸ்விகி கோ சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
பிக்கப் அண்ட் ட்ராப் சேவை
உங்களுடைய பார்சல் பொருட்கள் அல்லது லாண்டரிக்கு துணி போட வேண்டும் என்றாலும் அல்லது உங்களுக்கு தேவையான எந்த ஒரு டோர் டெலிவரி சேவையாக இருந்தாலும், இந்த புதிய ஸ்விகி கோ சேவையின் மூலம் அதை நீங்கள் நிறைவேற்றிக்கொள்ளலாம். டன்சோ நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்விகி பிக்கப் அண்ட் ட்ராப் சேவையில் களமிறங்கியுள்ளது எதிர்பாராத ஒரு நிகழ்வாகவே உள்ளது.ஸ்விகி கோ சேவை
இதே போல்
ஸ்விகி வடிக்கையளர்கள், ஸ்விகி கோ சேவையை பயன்படுத்தி ஸ்விகி ஸ்டோரில் இருந்தும்
அவர்களுக்குத் தேவையான மளிகை சாமான், மருந்து மற்றும் பல பொருட்களை எளிதாக இனிமேல்
டோர் டெலிவரி செய்துகொள்ளலாம். பிக்கப் ட்ராப் சேவைக்கான கட்டணத்தை மட்டும்
செலுத்தினால் போதும். இந்த புதிய சேவைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும்
என்று ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக