இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொதுவாக
நாம் பயன்படுத்தும் போனுக்கு யாராவது கால் செய்தால் ரீங் வரும். இந்த ரீங்
செய்யும் நேரத்தைப் பாதியாக அதாவது 45 நொடியை வெறும் 20 நொடியாகக் குறைத்து
மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு உள்ளது முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரீலையன்ஸ்
ஜியோ.
இதில
என்னப்பா இருக்குன்னு..? நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் இதில் தான் முகேஷ்
அம்பானியின் மிகப்பெரிய வியாபார தில்லுமுல்லு ஒளிந்து கொண்டு இருக்கிறது.
இந்திய டெலிகாம் துறை
இந்திய
டெலிகாம் சந்தையில் ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பின்பு இத்துறையில் கடுமையான போட்டி
உருவாகியுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தக் கடுமையான போட்டியில்
கிட்டத்தட்ட 3 வருடமாக ஆதிக்கம் செலுத்துவது என்பது சாதாரணக் காரியமில்லை
என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டும்
என்றால் நிச்சயம் சேவையின் தரமும், விலையும் குறைவாக இருக்க வேண்டும். இல்லையெனில்
ஏதாவது மோசடி செய்திருக்க வேண்டும்.
ஜியோவின்
மலிவான கட்டண சேவையின் அறிமுகத்திற்குப் பின் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும்,
கட்டணத்தைக் குறைத்து ஜியோவை விடவும் சிறந்த சேவையை அளிக்கிறது. இப்படியிருக்கும்
நேரத்தில் ஜியோ எப்படி ஆதிக்கம் செலுத்திகிறது என்பது தான் கேள்வியாக இத்தனை நாள்
இருந்தது.
இந்த
முக்கியமான கேள்விக்குக் கிடைத்த பதில் தான் மோசடி. ஆம் ஜியோ தில்லுமுல்லு செய்து
தான் ஜியோ ஆதிக்கம் நிறைந்த நிறுவனமாக வளம் வருகிறது.
ஏர்டெல்
இந்த
மோசடி குறித்து ஜியோ கூறுகையில், இந்தியாவில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும்
சாரசரியாக 45 நொடிகளுக்குப் போன் ரிங்கிங் நேரத்தை வைத்திருக்கும் போது ஜியோ
வெறும் 20 நொடிகள் ரீங் நேரத்தை நடைமுறையில் வைத்துள்ளது.
இதனால்
அழைப்பை ஏற்கும் முன்னரே வாடிக்கையாளர்கள் மிஸ்டு கால் பெறுகின்றனர். இது
செயற்கையாக அவுட்கோயிங் கால்களை இன்கம்மிங் கால் ஆக மாற்றப்படுகிறது என ஏர்டெல்
கூறுகிறது.
ஏர்டெல் – ஜியோ
உதாரணமாக
ஏர்டெல் நெட்வொர்கில் இருந்து ஒருவர் ஜியோ வாடிக்கையாளருக்குக் கால் செய்தல்
அவருக்கு 20 நொடிகள் மட்டுமே ரிங் ஆகும். இந்தக் குறைவான நேரத்தில் 30 சதவீதம்
பேருக்கு மிஸ்டு கால் பெறுவார்கள். இப்போது மிஸ்டு கால்களைப் பார்த்த ஜியோ
வாடிக்கையாளர் ஏர்டெல் வாடிக்கையாளருக்குக் கால் செய்வார்.
இதன்
மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு அவுட்கோயிங் கால் தற்போது இன்கம்மிங் காலாகத்
தில்லுமுல்லு செய்து ஜியோ மாற்றியுள்ளது.
இதில்
என்ன கொடுமை என்றால் இன்கம்மிங் பெறும் நிறுவனம் எதிர் நிறுவனத்திற்கு IUC
கட்டணமாக 6 பைசா கொடுக்க வேண்டும். இப்படி ஜியோ தளத்தில் பதிவாகும் 25 முதல் 30
சதவீத மிஸ்டு கால்களின் மூலம் செய்யப்படும் அழைப்புகளின் மூலம் 6 பைசா கட்டணத்தை
ஜியோ பெறுகிறது.
இதன்
வாயிலாக ஜியோ தற்போது மொத்தம் 65 சதவீத டெலிகாம் டிராபிக்-ஐ தன் வசம் வைத்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஜியோ மறுப்பு தெரிவித்துள்ளது.
உலகளாவிய சராசரி அளவீடு
இதுகுறித்து
ஜியோ கூறுகையில், 45 நொடிகள் என்பது உண்மையல்ல, 30 நொடிகள் தான் இந்தியாவில்
கடைப்பிடிக்கும் ஒன்று. உலகளவில் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் 15-20
நொடிகளுக்குத் தான் ரிங் நேரத்தை வைக்கின்றனர் இதில் வோடபோன் UK-வும் ஒன்று எனத்
தெரிவித்துள்ளது.
மேலும்
ஜியோ தளத்தில் வரும் அழைப்புகளில் 25-30 சதவீத அழைப்புகள் மிஸ்டு கால்கள் தான்
என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக