இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நெடுவாசல்
என்னும் ஊரின் ஆற்றங்கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த ஆற்றங்கரையில் ஓடம்
இல்லாததால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு எப்படி செல்வது? என்று தெரியாமல் இரண்டு
பேர் நின்று கொண்டிருந்தார்கள்.
அந்த
நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்கு செல்வதற்காக
வந்திருந்தது. ஆனால், அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில்
பாய்ந்து நீந்த ஆரம்பித்தது.
இதைப்
பார்த்த இரண்டு பேரில் ஒருவர் தொப்பென்று ஆற்றில் குதித்தார். அந்தக் காளை
மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். காளை மாடு சுலபமாக அவரை
இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.
மற்றொருவர்
நமக்கும் ஒரு வால் கிடைக்காதா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அந்த
நேரத்தில் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்து அக்கரைக்கு செல்ல இருந்தது. இதுதான்
நேரம் என்று இவரும் ஆற்றில் குதித்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டார்.
இவரை இழுத்துக் கொண்டு ஆற்றில் நீந்த முடியாமல் நாய் திணறியது.
ஒரு
கட்டத்தில் நாய், லொள் லொள் என்று குரைக்க ஆரம்பித்து விட்டது. அதன் விளைவு
இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள்
போக வேண்டிய திசை வேறு. ஆனால், போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
இந்த
கதை கரை சேர நினைக்கின்ற மனிதர்களின் எதார்த்தத்தை கூறுகிறது. இந்தக் கதையில்
வருவது போல்தான், சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின்
வாலைப் பற்றிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள்.
இன்னும்
சிலர்... இப்படியும் இருக்கிறார்கள்..
ஒரு
ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. அதன் உள்ளே ஏதாவது பொருள் இருக்குமோ
என்ற ஆசையில் ஒருவர் நீந்தி சென்று அதைப் பற்றிக் கொள்கிறார்.
ஆனால்,
நீண்ட நேரம் ஆகியும் அவர் கரைக்கு திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக்
கொண்டிருந்தார். கரையில் நின்று கொண்டிருந்த நண்பர்கள் கத்துகிறார்கள். நண்பா...
கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை. அதை
விட்டுவிடு! என்று கூறுகிறார்கள்.
அவரும்
ஆற்றின் நடுவே இருந்து அலறுகிறார். நான் இதை எப்பவோ விட்டுவிட்டேன். இப்பொழுது
இதுதான் என்னை விடமாட்டேங்குது என்று கூறினார். ஏனென்றால், அவர் பற்றிக் கொண்டது
கம்பளி மூட்டை இல்லை, அது ஒரு கரடிக் குட்டி!
நீதி
:
தவறாகப்
பற்றுகிறவர்கள், தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப்
பற்றுகிறவர்கள், கரையேறி விடுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக