இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கே.ஒய்.சி.,
எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை வரும் 2020, ஜனவரி, 1ஆம்
தேதிக்குள் புதுப்பிக்காவிட்டால், அந்த வங்கி கணக்கு முடக்கப்படும் என்று இந்திய
ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
வங்கி
கணக்குகள் வைத்துள்ள ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் கே.ஒய்.சி., எனப்படும்,
வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பிக்க வேண்டும் என்று வங்கி
நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக இதுகுறித்து
வாடிக்கையாளர்களுக்கு அங்கி நிர்வாகம் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அளித்து வருகிறது
இந்த
நிலையில் கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்க ரிசர்வ் வங்கி தற்போது காலக்கெடு
நிர்ணயித்துள்ளது. இதன்படி ரும் 2020, ஜனவரி, 1ஆம் தேதிக்குள்
புதுப்பிக்காவிட்டால், அந்த வங்கி கணக்கு முடக்கப்படும் என்றும் அதன்பின்னர் அந்த
கணக்கில் இருந்து, நேரடியாகவோ, 'ஆன்லைன்' மூலமோ, பணப்பரிமாற்றம் செய்ய முடியாது
என்றும் ஆர்பிஐ எச்சரிக்கை
விடுத்துள்ளது. இதனையடுத்து வங்கிக்கு நேரடியாக சென்றும் ஆன்லைன் மூலமும்
வாடிக்கையாளர்கள் கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பித்து வருகின்றனர்.
இந்த
கே.ஒய்.சி படிவத்தில் வாடிக்கையாளரின் அடையாள சான்று, இருப்பிட சான்று, தொலைபேசி
மற்றும் 'மொபைல்' எண், 'இ - மெயில்' முகவரி, புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை,
வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருந்த
தகவல்களில் மாற்றம் இல்லை எனில் ஆன்லைன் மூலம் வங்கியின் இணைய தளத்திற்கு சென்று
'கே.ஒய்.சி.,யில் மாற்றமில்லை' என்ற இணைப்பை, 'கிளிக்'செய்தால் போதும். மாற்றம் உள்ள
வாடிக்கையாளர்கள் 'கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்க, கணக்கு வைத்துள்ள வங்கி
கிளைக்கு சென்று, அங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, கேட்கப்படும்
ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக