Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 23 அக்டோபர், 2019

லீலைகளின் மன்னன் பிறந்துவிட்டார் !!

 Image result for naragasooran god


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நரகாசுரன்: பிறந்துவிட்டார்... லீலைகளின் மன்னன்... இனி என்ன நடக்குமோ?


நாரதர், கம்சனிடம் உனது அறியாமையை எண்ணி நான் என்ன செய்வேன்? அவர்களுக்கு பிறக்கும் குழந்தையை அழிக்காமல் உனது மரணத்தை நீயே வாங்கி கொள்கின்றாய். உன் வீரத்தை நான் என் சொல்வேன் என்று புகழ்ந்துரைத்தார்.

அதே வேளையில் தன் மரணத்தை பற்றி உரைத்ததும் என் மரணத்தை உருவாக்கக்கூடியது, தன் தங்கைக்கு பிறக்கக்கூடிய எட்டாவது குழந்தையே என்று அந்த அசரீரி கூறியதை என்று நாரதரிடம் கூறினான் கம்சன்.

நாரதரும் உனது தங்கைக்கு பிறக்கும் எட்டாவது குழந்தைக்கு முன்னால் பிறக்கும் இந்த ஏழு குழந்தைகளின் உதவியுடன் அந்த எட்டாவது குழந்தையானது உன்னை வென்று கொல்லப்போகும் என்றும், அவர்களுக்கு உதவியாக தேவர்களே இந்த ஏழு குழந்தைகளாக இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.

நாரதர் கூறியதை கேட்டதும் அதுவரை தனது மனதில் இருந்த அன்பு மறைந்து வசுதேவரிடம் இருந்து குழந்தையை பெற்று தனது வீரர்களிடம் ஒப்படைத்தான் கம்சன். பின்பு வசுதேவரையும், தனது தங்கையான தேவகியையும் சிறைப்பிடித்து தனது ராஜ்ஜியத்திலுள்ள சிறையில் மிகுந்த பாதுகாப்புடன் அடைத்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை உடனே என்னிடம் வந்து உரைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தான்.

பின்பு அந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகளை வரிசையாக கொன்று வந்தான். ஏழாவதாக பிறந்த குழந்தையை கொலை செய்ததை கண்ட வசுதேவர் மற்றும் தேவகி மனதில் ஒருவிதமான அச்சம் கொண்டனர். தங்களுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையை காக்க வேண்டுமென்று திருமாலிடம் இருவரும் வேண்டினர்.

ஓர் இரவில் வசுதேவரின் கனவில் வந்த திருமால் தன்னுடைய தீவிர பக்தனான மாடு மேய்ப்பவரான நந்தாவிடம், பிறக்கும் குழந்தையை எடுத்துச்சென்று அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அந்நாளில் அவருக்குப் பிறக்கும் பெண் குழந்தையை இங்கு எடுத்து வந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வசுதேவனுக்கு திருமால் ஆணையிட்டார். கனவில் திருமால் கூறியதை நன்கு நினைவில் வைத்துக்கொண்டு தங்களின் வேண்டுதலுக்கு மனமிரங்கி குழந்தையை பாதுகாத்த திருமாலுக்கு மனதார நன்றி கூறினார்கள்.

நரகாசுரனின் கடுமையான தவத்தால் மனம் மகிழ்ந்த பிரம்ம தேவர் நரகாசுரனுக்கு காட்சி அளித்தார். ஒளிப்பொருந்திய தேஜஸஷுடன் அழகிய தாமரை மலரில் வீற்றிருந்த பிரம்ம தேவர் நரகாசுரனை நோக்கி உன் தவத்தால் மனம் மகிழ்ந்தோம்... வேண்டும் வரத்தினை கேட்பாயாக..!! என்றார்.

தவத்தினால் தனக்கு காட்சியளித்த பிரம்ம தேவரை வணங்கி தனக்கு என்றும் சாகா வரம் வேண்டும் என்று வேண்டினான்.

உலகில் படைத்தல் தொழிலை சிறப்புற செய்து வரும் பிரம்ம தேவர் உலகில் தோன்றிய எந்த உயிரினமாக இருந்தாலும் பிறப்பு ஒன்று இருக்கும் பட்சத்தில் இறப்பு என்பது இருக்கும். அதனை நம்மால் அழிக்க இயலாது என்றும் இயற்கையை மீறி எவராலும் செயல்பட முடியாது. ஆகவே, வேறு வரத்தினை கேட்பாயாக..! என்று கூறினார்.
நாட்கள் கடக்க கடக்க தேவகியும், கர்ப்பவதியாகி அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனது எட்டாவது குழந்தையை ஈன்றெடுத்தாள். மனிதர்கள் செய்யும் பிழைகளை திருத்துவதற்காக அவர்களை நல்வழிப்படுத்தும் கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பை அறிந்து பஞ்ச பூதங்களும் மகிழ்ந்தன. பூமாதேவியும் மனமகிழ்ந்து காணப்பட்டாள்.

ஏனெனில் தேவகிக்கும், வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தை திருமாலின் அவதாரமான கிருஷ்ண அவதாரம் ஆகும். கிருஷ்ண பகவானே... குழந்தையாக பிறந்ததால் சிறையின் கதவுகள் திறந்தன. வசுதேவரின் கைகளில் கட்டப்பட்டு இருந்த கட்டானது அவிழ்ந்தது. சிறையின் வெளியில் பலத்த மழையும், காற்றும் வீசிக்கொண்டிருந்தன.

தொடரும்...!!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!