இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வ.உ.சிதம்பரம் பிள்ளை !!
வ.உ.சிதம்பரம்
பிள்ளை அவர்கள் 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம்,
ஒட்டபிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மையாருக்கு மூத்த மகனாக
பிறந்தார். இவரது முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை ஆகும்.
இளம் வயது மற்றும் கல்வி :
வ.உ.சிதம்பரம்
பிள்ளை அவர்கள் கல்வி கற்பதில் அதிக ஆர்வம் நிறைந்து காணப்பட்டார். இருந்தாலும்
அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் நினைத்த நேரத்தில் கல்வி கிடைப்பது என்பது கடினமாக
இருந்தது.
இவர்
குழந்தையாக இருந்தபோது கோலி, கபடி, குதிரை சவாரி, நீச்சல், வில்வித்தை,
மல்யுத்தம், சிலம்பாட்டம், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடியுள்ளார்.
தனது
ஆறு வயதிலேயே வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழ் ஆசிரியரிடம் தமிழை கற்றறிந்தார்.
தனது
பாட்டியிடம் சிவபுராண கதைகளையும், பாட்டனாரிடம் ராமாயணத்தினையும் மற்றும்
அல்லிக்குளம் சுப்ரமணிய பிள்ளையின் உதவி மூலம் மகாபாரதத்தினையும் முழுவதும்
தெரிந்து கொண்டார்.
பிறகு
தனக்கு தெரிந்த ஒரு அரசாங்க அதிகாரியின் மூலம் ஆங்கிலமும் கற்றுக்கொண்டார். பிறகு
தனது 14வது வயதில் தூத்துக்குடி சென்று பயின்றார். அதனை தொடர்ந்து திருநெல்வேலி
சென்று கல்வி கற்றார்.
வழக்கறிஞராக வ.உ.சிதம்பரம் பிள்ளை :
வ.உ.சிதம்பரம்
பிள்ளை வளர்ந்ததும் முதலில் தாலுகா அலுவலகத்தில் சில காலம் பணியாற்றினார். பிறகு
அவரது தந்தை சட்டப்படிப்பை மேற்கொள்ளுமாறு கூறி அவரை திருச்சிக்கு அனுப்பினார்.
திருச்சிக்கு சென்று சட்டக்கல்லூரியில் பயின்று 1894ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார்.
அதன்பின்
1895ல் ஒட்டபிடாரத்தில் தன் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். அவர் உரிமையியல்
மற்றும் குற்றவியல் என இருவகை வழக்குகளை கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில்
தேர்ச்சி பெற்றார்.
இவர்
வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். இவருடைய தகுதி, திறமை, நேர்மை
இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்பிற்குரியவராக திகழ்ந்தார்.
காவல்
துறையினரால் தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வ.உ.சி அவர்களால் விடுதலை
செய்யப்பட்டனர். இதனால் இவர் காவல் துறையின் கோபத்திற்கு ஆளானார்.
இந்த
சூழ்நிலையை விரும்பாத அவரின் தந்தை அவரை 1900ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு சென்று
பணியாற்றும்படி அனுப்பி வைத்தார். வ.உ.சி அங்கேயும் ஒரு சிறந்த வழக்கறிஞராக
இருந்தார்.
வழக்கறிஞராக
இருந்த வ.உ.சி. அவர்கள் எப்படி சுதந்திர போராட்டத்தில் தன்னை
ஈடுபடுத்திக்கொண்டார்? என்பதை நாளைய பகுதியில் பார்க்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக