ராசியும்.... பொதுவான குணமும்..!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும்
ஒவ்வொரு ராசி, லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும்,
ஒவ்வொருவிதமான பழக்கம், யோகம் போன்றவை அவரவர் ராசியை பொறுத்து அமையும்.
அந்த வகையில், இன்று நாம் முதல்
ராசியான மேஷ ராசிக்குரிய பொதுவான குணநலன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
மேஷ ராசி :
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார்.
மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல்
பாதம் ஆகியவை இடம்பெறுகின்றன.
பொதுவாக இவர்கள் செவ்வாயை ராசி
அதிபதியாக கொண்டு இருப்பதால் கோப குணத்தையும், பிடிவாதத்தையும், முரட்டு
சுபாவங்களையும் உடையவராக இருப்பார்கள்.
மேஷ ராசியின் வேறு பெயர்கள் :
வருடை, மை, ஆடு, தகர், மதி, கொச்சை, கொண்டல்.
பொதுவான குணங்கள் :
எதிலும் நேர்மையாக செயல்படும் தன்மை
கொண்டவர்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை
கொண்டவர்கள்.
உடன் இருப்பவர்களை பற்றி நன்கு அறிந்து
கொள்ளக்கூடியவர்கள்.
நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும்
கொண்டவர்கள்.
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும்
உடையவர்கள்.
மற்றவர்களின் பார்வைக்கு வெகுளி போல் காட்சி
அளிக்கக்கூடியவர்கள்.
தீர்க்கமான ஆயுளை உடையவர்கள்.
தெய்வ பக்தி கொண்டவர்கள்.
நிதானம் என்பது குறைவு.
எதையும் உடனே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்
கொண்டவர்கள்.
வீரம், கோபம் நிறைந்தவர்களாக
இருக்கக்கூடியவர்கள்.
மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம்
உடையவர்கள்.
நிர்வாகத்திறமை உடையவர்கள்.
ஒளிவு மறைவின்றி செயல்படக்கூடியவர்கள்.
வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள்.
நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள்.
கலைகளில் அதிக நாட்டம் இருக்கும்.
எதையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
கௌரவத்தை விட்டு கொடுக்காதவர்கள்.
தங்கள் எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம்
அளிக்கக்கூடியவர்கள்.
கோபத்தில் மன அமைதியை இழந்து விடுவார்கள்.
காரியத்தில் கண்ணும் கருத்துமாக
செயல்படக்கூடியவர்கள்.
எதிலும் தைரியமாக செயல்படும் தன்மை கொண்டவர்கள்.
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளை அதிகம்
கொண்டவர்கள்.
குடும்பத்தின் மீது அதிக அன்பு
கொண்டவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக