Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 அக்டோபர், 2019

கர்ப்பமான தாய்!

 Image result for கர்ப்பமான தாய்!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்தவர்கள் சகன்லால் – தாலிபாய்(40) தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்த நிலையில் முதல் மகளுக்கு திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இரண்டாவது மகள் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு சாலை விபத்தில் இவர்களின் மகன் இறந்துவிட்டார். மகன் இறந்து விட்டதால் கடைசி காலத்தில் தங்களை யார் பார்த்துக்கொள்வார் என நினைத்து மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து மருத்துவர்களை அணுகியுள்ளனர்.
தாலிபாய்க்கு ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுவிட்டதால் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதை அடுத்து தம்பதியினர் அதற்கு சம்மதித்தனர்.
இந்நிலையில் டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமான தாலிபாய் தனது 40 வது வயதில் நான்கு குழந்தைகளை பெற்றுடுத்துள்ளார். அதில் இரண்டு பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள்.
மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் 40 வயதில் தாய் மீண்டும் கர்ப்பம் அடைந்து 4 குழந்தைகளை பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக