இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தென்கொரியாவைத்
தாக்கிய மிடாக் புயல் பாதிப்பினால் இதுவரை 7 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கான மக்கள்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு தென்கொரியாவை தாக்கிய இந்த புயலினால் அங்கு கனமழை பெய்து பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததோடு நிலச்சரிவும் ஏற்பட்டிருந்தது.
மேலும் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமற்போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் புயல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அத்தோடு இதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் தொடர்ந்தும் அங்கு மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இன்று குறித்த புயல் முழுவதுமாக கரையைக் கடக்கும் என்றும் இதன் காரணமாக மழைப்பொழிவு இருக்கும் என்றும் தென் கொரிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக