Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 அக்டோபர், 2019

சாபம் Vs தோஷம்... என்ன வித்தியாசமா இருக்கும்?...

Image result for சாபம் Vs தோஷம்... என்ன வித்தியாசமா இருக்கும்?...
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சாபம், தோஷத்தால் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல், பல பரிகாரங்கள் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் எது செய்தால் சாபம், தோஷம் தீரும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

சாபம் :

 சாபம் என்பது அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர், வேதனையுடன் கண்ணீருடன் வெளிப்படுத்தும் எதிர்மறை வார்த்தைகள்.

சாபத்திலிருந்து விமோசனம் :

 சாபம் பெற்றவர் தான் செய்தது தவறு என உணராத வரை, அந்த தோஷத்திலிருந்து விடுபடவே முடியாது. அதே போல் தீங்கிழைத்தோர், அது தவறு என உணர்ந்து, தீங்கிழைக்கப்பட்டோரிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டால், அதற்கு அவர் மன்னிப்பு கொடுத்தால் மட்டுமே சாபம் நீங்கும்.

தோஷம் :

 ஒருவர் அறிந்தோ, அறியாமலோ செய்யும் வினையின் எதிர்வினையை தான் நாம் தோஷம் என்கிறோம். தோஷத்தைப் போக்கிக்கொள்ள சற்று வாய்ப்புகள் அதிகம். ஆனால் சாபத்தைப் போக்கிக்கொள்வது அத்தனை சுலபமானதல்ல.

தோஷத்திலிருந்து விமோசனம் :

 தான் என்ன தவறு செய்தேன் என உணராமல், அதனால் தொடரும் பாவம் தான் தோஷம். அது இந்த காலத்தில் அல்லது முன் ஜென்மத்தில் கூட ஏற்பட்டுத் தொடரலாம்.

 போன பிறவியில் பசுவையும், கன்றையும் பிரித்துவிட்ட பாவம், கோ - சம்ராட்சணம் செய்தால் ஓரளவு அதன் கடுமையிலிருந்து தப்பிக்க முடியும். இருப்பினும் முற்றிலும் நீங்கிவிடாது.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் :

 நாம் என்ன பாவம் செய்தோம் என்பது தெரியாததால், அதை போக்கிக்கொள்ள சிவனை நாடுவது சிறந்தது.

 அடிக்கடி சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவதுதான் நம் பாவங்களை போக்கி நல்வினைகளை அதிகரிக்கும்.

கடவுள்களுக்கே சாபம், தோஷம் இருந்தால் அதை தீர்க்க சிவபெருமானை வணங்குவது வழக்கமாக உள்ளது. நாமோ சாதாரண மனிதர்கள், சிவாலங்களுக்கு சென்று வழிபடுவதும், தர்ம காரியங்களை செய்வதும் சாபம், தோஷத்திலிருந்து நம்மை காப்பாற்றும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக