இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கேரளாவின் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில்
நேற்று முன்தினம் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசனம்
செய்ய இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து
வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி
ஆந்திராவின் திருமலையில் இருந்து 13 அய்யப்ப பக்தர்கள் அடங்கிய குழு ஓன்று
பாதயாத்திரையாக நடந்து வருகின்றனர்.இவர்களுடன் ஒரு தெரு நாயும் சேர்ந்து
பாதயாத்திரையாக 480 கிலோமீட்டர் தூரம் வந்து உள்ளது.
இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில் , இந்த
நாய் எங்களுடன் பாதயாத்திரையாக 480 கிலோமீட்டர் தூரம் வந்து உள்ளது.நங்கள்
தயாரிக்கும் உணவை நாய்க்கு வழங்குவதாக கூறினர்.ஒரு முறை நாய் காலில் முள்
குத்தியதால் கால்நடை மருத்துவரிடம் அனுமதித்தோம்.
மருத்துவர் சிகிக்சை அளித்தார்.அதன் பின்
எங்களுடன் வராது என நினைத்தோம். ஆனால் அது எங்களை பின் தொடந்து வந்ததாக கூறினார்.
இது ஒரு புதிய அனுபவம் எனவும் கூறினார். தற்போது இந்த பக்தர்கள் சிக்கமகளூரு
மாவட்டத்தின் கோட்டிகேஹராவை அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக