Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 நவம்பர், 2019

’பூர்விகா மொபைல் ’கடையில் பல லட்சம் மோசடி : ஊழியர் கைது !

chennai




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல பூர்விகா கடையில், பல ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை பெற மோசடியாகக் கடன் ஒப்புதல் அளித்து, ரூ. 17 லட்சம் அளவுக்கு மோசடி செய்த ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் இயங்கிவரும் பூர்விகா மொபைல் கடையில், கடந்த 2 வருடமாக ஹோம் கிரெடிட் என்ற நிறுவனத்தின் 'டையப்'பில் வாடிக்கையாளருக்கு கடன் வசதி இருந்துள்ளது.
 
அப்போது, வாடிக்கையாளர்களை கவர பத்து நிமிடத்தில் ஆதர் உள்ளிட்ட அடையாளச் சான்றிதழ் நகல்களை பெற்று கடன் ஒப்புதல் வழங்கப்படுவது வழக்கம்.
 
இந்நிலையில், இந்தக் கடன் ஒப்புதல் வழங்க நிதி நிறுவனத்தில் சார்பில் நியமிக்கப்பட்ட  ஊழியர் சாந்தகுமார் என்பவர், கடந்த ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் தனது உறவினர்கள், நண்பர்களை வரவழைத்து 33 விலை உயர்ந்த செல்போன்களுக்கு கடன் வழங்கியுள்ளனர்.அதன்பின்னர், கடன்பெற வழங்கப்பட்ட ஆவணங்கள் போலி என கூறி கடனை ரத்து செய்து மோசடி செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்காக வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுள்ளனர்.
 
மேலும், சாந்தகுமாருக்கு அடுத்து சேர்ந்த இரு  ஊழியர்களும், சாந்தகுமாரைப் போலவே மோசடி செய்துள்ளனர்.
 
அதன்பின்னர் பணியில் சேர்ந்த நவீன் பிரியன்  மற்றும் பிரகாஷ் ஆகியோரும், தொடர்ந்து மோசடி செய்துள்ளனர். இந்த வகையில் பூர்விகாவுக்கு சுமார் 17 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்தக் பணத்தை ஹோம் கிரிடிட் நிறுவனம் வழங்கி வந்த நிலையில்,  பூர்விகாவுக்கு நஷ்டம் ஏற்படுத்த நினைத்த மோசடி ஊழியர்களின் மீது  அந்நிறுவனம் அளித்த புகாரின் பேரில்,  போலீஸார் சாந்தகுமாரை கைது விசாரித்து வருகின்றனர்.மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக