இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஊரில் திருமண விழா, காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, பெயர் சூட்டு விழா இதுபோன்ற என்னென்ன சுபகாரிய விழாக்கள் வருகிறதோ? அனைத்து விழாக்களிலும் குடும்பத்தோடு கலந்து கொள்வது ராஜாவின் வழக்கம். அங்கு அவருக்கு முதல் மரியாதை வழங்கப்படும். அவரும் விழா முடியும் வரை இருந்து பொன் பொருளை அள்ளிக்கொடுத்து வாழ்த்திவிட்டு தான் வருவார்.
ஆனால், துக்கவீடு என்றால் ராஜா குடும்பத்தினருடன் செல்லமாட்டார். அப்படியே சென்றாலும் இரண்டு நிமிடத்திற்கு மேல் அங்கு இருக்கமாட்டார். தனது கைத்தடியை அவர் வந்ததன் அடையாளமாக வைத்துவிட்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீடு திரும்பி விடுவார். இறந்தவர் வீட்டிற்கு தான் வந்து விட்டதாக எல்லோரும் நினைக்க வேண்டும் என்பதற்காக கைத்தடியை வைத்துவிட்டு செல்வார்.
ஒருநாள் ராஜாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத்திணறல் அதிகமானதால் நகரத்தில் உள்ள பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருதய ஆப்ரேன் நடந்தது. ஆனால், அவர் திடீரென்று இறந்துவிட்டார். அவரது மனைவியும், மகனும் அழுது புரண்டனர். ராஜா பெரும் தனவந்தர் என்பதால், இறப்பு செய்தி சுற்றியுள்ள அனைத்து ஊர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். ஆனால், ஒரு சிலர் மட்டுமே மாலையுடன் வந்தனர். பலர் ராஜா தங்கள் வீட்டு துக்கநாளில் விட்டுச் சென்ற கைத்தடியோடு வந்தனர். அதை ராஜா உடல் அருகே வைத்துவிட்டு சில நிமிடம் கூட நிற்காமல் திரும்பிச் சென்றனர்.
இறுதிச்சடங்கு நேரம் நெருங்கியது. அங்கு ஆட்கள் இல்லாமல் வெறும் கைத்தடி குவியலே நிறைந்திருந்தது. ராஜாவின் மனைவியும், மகனும் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 'வாழ்வுக்கு போகலைனாலும், சாவுக்குப் போகணும்னு சொல்வாங்க". சாவுக்கு போற இடத்துல கடைசிவரை இருந்து காரியம் நிறைவேற்றிவிட்டு தான் வரனும். ஆனால், இவர் பெரிய மனுஷன்னு காட்டிக்கிறதுக்காக கைத்தடியை விட்டுட்டு வந்தாரு. இன்னிக்கு அவரது இறுதி நாளுக்கும் கைத்தடிகள் தான் வந்திருக்கு. கைத்தடிகளா வந்து காரியம் நடத்தப்போகுது?. உங்க அப்பாவுக்கு நடந்த இந்த நிலைமையை நினைத்தாவது நீ திருந்தி வாழ் என தன் மகனிடம் கூறினாள்.
போகும்போது பொன், பொருளை கொண்டு செல்ல முடியாது. நல்ல பெயர் சேர்த்து வைத்திருந்தால் போதும். ஊரார் நம் புகழ்பாடி தூக்கிச் செல்வார்கள். இதை மனதில் வைத்துக்கொள் என்று தன் மகனிடம் கூறினாள். ராஜாவின் மனைவியும், மகனும் அவரது இறுதிச்சடங்கு வேலைக்கு கூலி ஆட்களிடம் பேசி காரியத்தை நடத்தினர். இதுவரை தந்தையின் தடம் பற்றி நடந்தவன், அவர் இறந்த பிறகு, பண்ணையாரின் மகன் என்று சிறிதும் நினைக்காமல் மக்களோடு மக்களாக வாழத் தொடங்கினான்.
நீதி :
பொன், பொருள் சேர்ப்பது கௌரவம் அல்ல... நல்ல பெயர் எடுப்பதில் தான் கௌரவம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக