Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 18 நவம்பர், 2019

முகம் பளிச்சென்று இருக்க வேண்டுமா?

 Image result for முகம் பளிச்சென்று இருக்க வேண்டுமா

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


உங்களின் அழகுக்கு அழகு சேர்க்க... முகம் பொலிவுடன் இருக்க... இதை செய்யுங்கள்...!!

மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும்.

வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும், சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

வேப்பிலையையும், வெள்ளரியையும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ்-ஐ தனியாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால், உங்கள் முகம் பளிச் பளிச்தான்.

தக்காளி சாற்றினை தினமும் முகத்தில் தடவி, மசாஜ் செய்து, உலரவைத்து கழுவி வந்தால் சருமம் பொலிவோடு இருக்கும்.

கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள்.

அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.

ஆரஞ்சு ஜூஸில் சிறிது தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை கலந்து, பின் அதனை முகத்தில் தடவி 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்திற்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைத்து பின் கழுவினால் சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமமானது இளமையுடன் காட்சியளிக்கும்.

வறட்சியுடனும், மென்மையிழந்து இருக்கும் சருமத்திற்கு, தேனை தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பொலிவுடன் இருக்கும்.

வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மற்றும் முகத்தில் 20 நிமிடம் வைத்திருந்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!