Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 டிசம்பர், 2019

சிகரெட் பிடிக்காத ஊழியர்களுக்கு 6 நாட்கள் எக்ஸ்டிரா லீவு...!





ப்பான் டோக்கியோவைச் சேர்ந்த பியாலா இன்க் என்ற மார்கெட்டிங் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தங்கள் ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான சலுகையை அறிவித்துள்ளது. அந்த சலுகை தற்போது பலரது கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
15 நிமிட செலவு
இந்த நிறுவனத்தின் அலுவலகம் ஒரு பெரிய கட்டிடத்தின் 29வது மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்த மாடியில் பணியாற்றும் ஊழியர்கள் சிகரெட் பிடிக்க வேண்டும் என்றால் தரை தளத்திற்கு வந்து செல்ல வேண்டும். ஒரு நாளுக்கு ஒருமுறை சிகரெட் பிடிக்கக் குறைந்தது 15 நிமிடமாவது அவர்கள் செலவு செய்ய வேண்டும்.
வசதியில்லை
அந்நிறுவனத்திற்கு தங்கள் ஊழியர்கள் சிகரெட் பிடிப்பதற்காக நேரத்தை வீணாக்குவது பிடிக்கவில்லை மேலும் அந்த கட்டிடத்தில் குறிப்பிட்ட அந்த அலுவலகம் இருக்கும் இடத்திலேயே சிகரெட் பிடிப்பதற்காக வசதியும் இல்லை. இதனால் முதலில் அந்நிறுவனம் சிகரெட் பிடிக்கச் செல்ல அனுமதி மறுத்தது. மேலும் ஊழியர்களை சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடும் படி அறிவுறுத்தியது.
இடைவேளை
இதனால் ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சண்டை வந்தது. ஊழியர்கள் சிகரெட் பிடிப்பது எங்கள் உரிமை அதை விடுவது குறித்து எல்லாம் அலுவலக நிர்வாகம் உத்தரவிட முடியாது. சிகரெட் பிடிக்க இடைவெளி கண்டிப்பாக வேண்டும் எனக் கோரினர்.
சலுகை
இதனால் ஊழியர்களுக்கும் அலுவலக நிர்வாகத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்குச் சென்றது. அவர் இதற்காக ஒரு வித்தியாசமான சலுகையை தங்கள் ஊழியர்களுக்கு அறிவித்தார்.
6 நாட்கள் விடுமுறை
அதன்படி ஊழியர்கள் தாராளமாக சிகரெட் பிடிக்கச் செல்லலாம். ஆனால் சிகரெட் பிடிக்க இடைவேளை எடுக்காத ஊழியர்களுக்கு ஆண்டிற்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்தார்.
குறைவான வேலை பாதிப்பு
தினந்தோறும் 15 நிமிடம் பிரேக் எடுத்து சிகரெட் அடிப்பதை விட ஆண்டிற்கு 6 நாட்கள் விடுமுறை எடுப்பதால் வேலையில் ஏற்படும் பாதிப்பின் அளவுகள் குறைவு என்பதால் இதை அவர் தேர்வு செய்தார்.
தர்மசங்கடம்
இந்த அறிவிப்பு வெளியானதும் சிகரெட் பிடிக்கும் ஊழியர்களுக்கு பெரும் தர்ம சங்கடமான சூழ்நிலை வந்துவிட்டது. இதனால் ஊழியர்கள் பலர் அலுவலக நேரத்தில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடத் துவங்கிவிட்டனர்.
பாராட்டுகள்
இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த நிறுவன தலைமை நிர்வாகியின் முடிவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக