Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 ஜனவரி, 2020

கேரள லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு! பதட்டத்தில் காவல் நிலையம் ஓடிய மேற்கு வாங்க தொழிலாளி!

கேரள லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு! பதட்டத்தில் காவல் நிலையம் ஓடிய மேற்கு வாங்க தொழிலாளி!


மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தஜ்முல்ஹக் என்கிற கட்டிட தொழிலாளி கேரளாவில் கோழிக்கூடு பகுதியில் தங்கியுள்ளார். தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்.
இவர் அண்மையில் கேரள அரசின் காருண்யா பாக்யஸ்ரீ என்கிற லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசை விழுந்ததை நினைத்து எவ்வளவு சந்தோஷப்பட்டாரோ அதே அளவு பயப்படவும் செய்துள்ளார். உடனே, பதறிப்போய் காவல்நிலையம் சென்றுள்ளார்.
அங்கு தனக்கு லாட்டரியில் பரிசு விழுந்ததாகவும், அதனை பத்திரமாக வாங்கி தருமாறும், யாரும் அதனை போலி லாட்டரி என பறித்து கொள்வார்களோ என பயப்படுவதாகவும், கூறினார். இதனால், பாதுகாப்பு தருமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அவரது பயத்தை புரிந்துகொண்ட போலீசார், அவருடன் லாட்டரி கம்பெனிக்கு சென்று, பரிசுத்தொகையை வாங்கி, அதனை தஜ்முல்ஹக் பேரில் வங்கியில் டெபாசிட் செய்து கொடுத்துள்ளனர். இதற்காக போலீசாருக்கு தஜ்முல்ஹக்  தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக