பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை வெடிப்பில் வெளியான எரிமலைக்
குழம்பு மற்றும் சாம்பல்களில் இருந்து செங்கல்களை தயாரித்துள்ளது அரசு.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்துள்ள தால் என்ற எரிமலை சில வாரங்களுக்கு முன்னர் வெடித்து டன் கணக்கில் எரிமலைக் குழம்பை வெளியேற்றியது. இதனால் அதைச் சுற்றியுள்ள பினன் நகர் முழுவதும் சாம்பல் படலமாக ஆனது.
இதையடுத்து பினன் நகரின் மேயர் மக்களை சாம்பல்களை சாக்குகளில் சேகரித்து அரசிடம் தர வேண்டுகோள் விடுத்தார். இதைய்டுத்து மக்கள் ஒப்படைத்த சாம்பலைக் கொண்டு அரசு ஒரு நூதனமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
எரிமலை குழம்பு மற்றும் சாம்பலுடன், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள், மணல் மற்றும் சிமெண்ட் ஆகியவற்றை செங்கல்களைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டது. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 5000 செங்கற்கள் தயாரிக்கப்பட்டன.
தயாரிக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள செங்கற்கள் தனியாரிடம் விற்கப்பட்டு எரிமலை வெடிப்பில் பாதிகக்ப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக