Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 ஜனவரி, 2020

விரைவில் Huawei 5ஜி பட்ஜெட் தொலைபேசி... இதன் விலை, ரூ.11,000 க்கு குறைவாக இருக்கும்

விரைவில் Huawei 5ஜி பட்ஜெட் தொலைபேசி... இதன் விலை, ரூ.11,000 க்கு குறைவாக இருக்கும்



 2020 ஆம் ஆண்டில் புதிய 5 ஜி ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் திட்டமிட்டால், 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை நிச்சயமாக உங்களைத் தொந்தரவு செய்யும். இதுபோன்ற சூழ்நிலையில், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஹவாய் 5ஜி பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதால் சற்று காத்திருப்பது நல்லது. தற்போது 5ஜி இணைப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு $300 க்கும் அதிகமாக (சுமார் ரூ. 21,000) செலவாகிறது. இருப்பினும், இந்த சாதனங்களின் விலையை $150 (சுமார் ரூ. 10,500) அல்லது அதற்கும் குறைவான விலையில் கொண்டுவர ஹவாய் திட்டம் போட்டுள்ளது.
தற்போது, ​​பெரும்பாலான 5ஜி கைபேசிகள் $400 க்கும் அதிகமாக (சுமார் ரூ. 28,500) செலவாகின்றன. இத்தகைய சூழ்நிலையில், 5ஜி சப்போர்ட் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கான பட்ஜெட் இல்லையா? குறைந்த விலையில் 5ஜி போன்களை வாங்க திட்டமிட்டு உள்ளீர்களா? கவலை வேண்டாம், ஹூவாய் நிறுவனத்தின் 5 ஜி தயாரிப்பு வரிசையில் 150 டாலர் (சுமார் ரூ .10,600) வரை மலிவாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனை 2020 கடைசி மாதங்களில் அல்லது 2021 ஆரம்பத்தில் கிடைக்கலாம்.
புதிய தொழில்நுட்பம் காலப்போக்கில் மலிவானதாக மாறும்பட்சத்தில் மலிவான 5 ஜி ஸ்மார்ட்போன்கள் வரும் காலங்களில் பிரதானமாக இருக்கும். ஹவாய் நிறுவனத்தின் மீதான அமெரிக்கத் தடைக்குப் பிறகு, இது நிறுவனத்திற்கு இது ஒரு கடினமான நேரம், ஆனால் நிறுவனத்தின் சொந்த நாடான சீனாவில், நிறுவனத்தின் புகழ் குறையவில்லை.
ஹூவாய் மேட்30 5ஜி மற்றும் மேட்30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களில் 1 மில்லியன் யூனிட்களை ஒரே நிமிடத்தில் நிறுவனம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக