Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 17 பிப்ரவரி, 2020

அச்சத்தில் பொதுமக்கள்.! சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய நபர் பலி.!

அச்சத்தில் பொதுமக்கள்.! சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய நபர் பலி.!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சக்திகுமார் என்பவர் கடந்த 4-ம் தேதி சீனாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த 14-ம் தேதி ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறையிடம் கேட்டபோது சீனாவில் இருந்து திரும்பியவர் என்பது தெரிய வைத்துள்ளது. பின்னர் சீனாவில் இருந்து வந்தவர்களை கண்காணித்து வருவதாக கூறும் நபர்களின் பட்டியலில் சக்திகுமார் பெயர் இடம்பெறவில்லை. 

இந்த நிலையில் சக்திகுமாரின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சீனாவில் இருந்து வருபவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து 14 நாட்களுக்கு பிறகே அவரை வெளிய செல்ல அனுமதிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில், கொரோனா வைரசால் தான் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கும் என்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக