Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 21 செப்டம்பர், 2020

உலகத்துல 2 பேரை ரொம்ப நேரம் முறைச்சு பாக்க முடியாது... யார் தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!!
-------------------------------------
காதலன் : உன் சமையலறையில் நான் உப்பா? சர்க்கரையா?
காதலி : ம்ம்ம்ம்ம்ம்... கரித்துணி...
காதலன் : 😨😨
-------------------------------------
ராமு : பாபு மாசத்துக்கு எப்படியும் பத்து, பதினைந்து படத்துக்கு பூஜை போட்டுருவாரு...
சீனு : அவ்வளவு பெரிய டைரக்டரா?
ராமு : இல்ல... நல்ல சாஸ்திரிகள்.
சீனு : 😝😝
-------------------------------------
ராஜா : பக்கத்து வீட்டுக்காரரு வாக்கிங் போக கூப்புடுறாரு.
கார்த்தி : முடியாது... முடியாது... வாக்கிங் போகும்போது சமையல் எப்படி செய்யுறது?-ன்னு கேட்டு உயிரை வாங்குவாரு.
ராஜா : 😬😬
-------------------------------------
இன்றைய கடி...!
-------------------------------------
இந்த உலகத்துல 2 பேரை ரொம்ப நேரம் முறைச்சு பாக்க முடியாது... யார் தெரியுமா?
.
.
.
.
.
.
.
ஒன்னு சூரியன்...
ரெண்டு மனைவி...😂😂

தீபக் சாவு வீட்டுக்கு போயிருந்தார். போட்டோ கிராபர் வராததால அவரை செத்து போனவரை புகைப்படம் எடுக்க சொன்னார்கள்.
ஆனால் போட்டோ எடுக்க போனவருக்கு தர்ம அடி விழுந்தது...
என்ன நடந்திருக்கும்?...
.
.
.
.
.
.
ஸ்மைல் ப்ளீஸ்...!😂😂
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. பந்தலைச் சுற்றி பாம்பு தொங்குது. அது என்ன?

விடை : புடலங்காய்.

2. ஊளையிட்டுக் கொண்டே ஊரைச் சுமக்கும். அது என்ன?

விடை : புகைவண்டி.

3. கடல் நீரில் மறைந்திருக்கும் கல். அது என்ன கல்?

விடை : உப்புக்கல்.

4. நிறைவேறாத ஆசைகளை நித்திரையில் பெறலாம். அது என்ன?

விடை : கனவு.

5. கையால் இழுத்தால் அசையும் நாக்கு, கணீரென்று அனைவரையும் அழைக்கும். அது என்ன?

விடை : மணியோசை.
-------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

விளக்கம் :

அனைவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களை பேசுபவருக்கு துன்பம் தரும் வறுமை வராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக