-------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!!
-------------------------------------
ஹோட்டல் ஓனர் : சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே... அதுக்கு இங்கயே
சாப்பிட வேண்டியது தானே?
அருண் : மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி இருக்காரு..
அதான்..!
ஹோட்டல் ஓனர் : 😳😳
-------------------------------------
சிந்தனை துளிகள்...!!
-------------------------------------
🌟 தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது என செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து
போகிறான்.
🌟 உலகம் ஒரு நாடக மேடை. ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
🌟 செய்வதற்கு எப்போதும் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.
🌟 அன்பையும், ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவார்.
🌟 வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்து கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற
மனிதனாவான்.
🌟 தோல்வி ஏற்படுவது அடுத்த செயலை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை.
-------------------------------------
சிந்திக்க வைக்கும் குட்டிக்கதை...!!
-------------------------------------
ஒரு அரசருக்கு மூன்று மகன்கள்... தனக்கு பின் நாட்டை யார் கையில் கொடுப்பது?
என்பதற்காக அவர்களை அழைத்து ஒரு போட்டி வைத்தார்...
காட்டிற்கு சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவை கொண்டு
வந்து ஆளுக்கொரு ஏழைக்கு அவ்வுணவை கொடுக்க வேண்டும். ஆனால் மூட்டையை எனக்கு
பிரித்துக் காட்ட தேவை இல்லை... என்றார் அரசர்.
மகன்கள் மூவரும் காட்டிற்கு சென்றனர். முதலாமவன் மரத்தில் ஏறி நல்ல பழங்களை
பறித்து மூட்டை கட்டினான். இரண்டாமவன் சோம்பல் பட்டு கீழே விழுந்த அழுகிய பழங்களை
பொறுக்கி மூட்டை கட்டிக்கொண்டான்.
மூன்றாமவன் ஏழைக்குத்தானே கொடுக்கப்போகிறோம் என்று அலட்சியமாக கீழே கிடந்த
குப்பைகளை அள்ளி மூட்டையாக கட்டிக்கொண்டான்.
மூவரும் ராஜாவிடம் சென்றனர்.
பின்னர் ராஜா தன் மூன்று மகன்களிடமும் நான் சொன்ன ஏழைகள் வேறு யாரும் இல்லை...
நீங்கள்தான்... நீங்கள் கொண்டு வந்ததை இரண்டு வாரங்களுக்கு நீங்களே சாப்பிடுங்கள்
என்று கூறினார். நல்ல பழங்களை கொண்டு வந்தவன் அதை சாப்பிட்டு அரசன் ஆனான்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா...!!
-------------------------------------
கலக்கலான கடி ஜோக்ஸ்...!!
-------------------------------------
வாழை மரம் தார் போடும்... ஆனா
.
.
.
அத வெச்சு ரோடு போட முடியுமா?😂😂
பால்கோவா பால்ல இருந்து பண்ணலாம்... ஆனா
.
.
.
ரசகுலாவ ரசத்துல இருந்து பண்ண முடியுமா?😂😂
திங்கள், 21 செப்டம்பர், 2020
சிந்திக்க வைக்கும் குட்டிக்கதை.. போட்டியில் வென்றது யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
ஊர்க்கோடாங்கி
திங்கள், செப்டம்பர் 21, 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக