Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 17 செப்டம்பர், 2020

48எம்பி கேமராவுடன் அசத்தலான விவோ Y51(2020) ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

விவோ Y51(2020)

சர்வதேச சந்தையில் விவோ நிறுவனம் தனது விவோ Y51(2020) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி கேமரா வசதி மற்றும் சிறந்த மென்பொருள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தைப் பற்றிய முழுவிவரங்களையும் பார்ப்போம்.

விவோ Y51(2020) ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ Y51(2020) ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ Y51(2020) ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிமைரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y51(2020) ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கருப்பு, நீலம்,வெள்ளை நிறங்களில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

புளூடூத் 5.0, 4 ஜி எல்டிஇ, டூயல் சிம், ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடூ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y51(2020) ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ரூ.16,346 -விலையில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!