Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 17 செப்டம்பர், 2020

செல்போனை திருடி செல்பி எடுத்த குரங்கு:செல்போன் எப்படி திரும்பக் கிடைத்தது தெரியுமா?- வீடியோ!

குரங்குச் சேட்டைகள்

மலேசியில் இளைஞர் ஒருவரின் மொபைலை திருடிய குரங்கு, அதில் செல்பி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு மொபைலை காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

குரங்குச் சேட்டைகள்

குரங்குகளின் சேட்டைகளில் சில நம்மை வியக்கவைக்கும் விதமாகவே இருக்கும். குரங்கு மட்டுமல்ல பொதுவாக ஒரு சில விலங்கினங்களே நாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாத செயல்களை செய்து நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு நெகிழ வைக்கும். அதன்படி மலேசியாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

உறங்கச் சென்ற இளைஞர்

மலேசியாவின் படு பஹாட் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ஜாக்ரிட்ஜ் ரோட்ஜி. 20 வயதான இவர் வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமை தனது மொபைல் போனை படுக்கைக்கு அருகில் வைத்து உறங்கச் சென்றுள்ளார்.

கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளதோ

காலை எழுந்து அதே இடத்தில் மொபைலை பார்த்தப்போது அது அந்த இடத்தில் இல்லை. வீட்டில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளதோ என பிற இடங்களில் உள்ள பொருட்களை தேடியுள்ளார். அனைத்து பொருட்களும் அந்தந்த இடத்திலேயே இருந்துள்ளது.

காட்டுப்பகுதியில் கிடந்த மொபைல் போன்

என்ன நடந்தது என்றே தெரியாமல் தனது தந்தையின் மொபைல் போனை எடுத்து அவரது மொபைலுக்கு கால் செய்துள்ளார். ரிங் போகியுள்ளது. இதை தனது மொபைல் போனை ஒவ்வொரு பகுதியாக தேடி, வீட்டுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் தேடும்போது மொபைல் போன் கிடைத்துள்ளது.

புகைப்படத்தை பார்த்தப்போது அதிர்ச்சி

மொபைல் போனை எடுத்து ஒவ்வொன்றாக சோதித்து பார்த்துள்ளார். அப்போது கேலரிக்குள் சென்று புகைப்படத்தை பார்த்தப்போது அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் வரிசையாக குரங்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது.

செல்பி வீடியோ ஒன்றில் குரங்கின் முகம்

இந்த புகைப்படங்களை தனது குடும்பத்தினர் அனைவரிடமும் காண்பித்துள்ளார். செல்பி வீடியோ ஒன்றில் குரங்கின் முகம் மிக அருகில் இருந்துள்ளது. செல்போனை கடித்து சாப்பிடுவதற்கும் அந்த குரங்கு முயற்சிதுள்ளது.

சமூகவலைதளங்களில் வைரல்

எதுவும் செய்யமுடியவில்லை என்றவுடன் செல்போனை காட்டுப்பகுதியிலேயே போட்டுவிட்டு சென்றுள்ளது. வீட்டுக்குள் குரங்கு நுழைந்து போனை திருடிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த இளைஞர் இதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக