Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 19 செப்டம்பர், 2020

சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் தங்க தாலி திருடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மரக்காணம் பிரம்மதேசம் எனும் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அனுமதித்துள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயா சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் வந்த மர்ம நபர் ஒருவர் சிகிச்சை பெற்றுவந்த ஜெயாவின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க தாலி செயினை திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டன் தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, செயின் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக