Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 19 செப்டம்பர், 2020

வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் அடித்துக்கொலை...?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகில் தென் பகுதியில் வசித்து வருபவர் ஜோதி இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா. இந்த நிலையில் காலை சித்ரா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தபோது அங்கு வந்த சில மர்ம நபர்கள் சித்ராவை அடித்து கொலை செய்துள்ளனர்.

இதனால் சித்ரா சம்பவஇடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து போலீசார் நகைக்காக நடந்த கொலையா அல்லது வேறு எதுவும் காரணமா என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!