Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படத்தை இயக்கும் சௌந்தர்யா ரஜினியின் உதவியாளர்

மீண்டும் சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் 'ஹிப்ஹாப் தமிழா'! | hiphop  tamizha releasing nan alien | nakkheeranசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் மற்றும் தனுஷ் நடித்த ’விஐபி 2’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்பது தெரிந்தது. இவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ’விஐபி-2’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சந்தோஷ் என்பவர் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில்தான் ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் அவருக்கு ஜோடியாக கல்லூரி மாணவி ஒருவர் நடிகையாக அறிமுகமாகி உள்ளார் என்றும் குறிப்பிடத்தக்கது

அஜித்தின் விஸ்வாசம் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும் இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக