Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

வருமான வரி: 30 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகை!

IT refund: வருமான வரி: 20 லட்சம் பேருக்கு ரீஃபண்ட்! - it department has  returned rupees 62,361 crore to more than 20 lakh taxpayers | Samayam Tamil 

ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையில் சுமார் 30.92 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகை வழங்கப்பட்டுவிட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இக்காலத்தில் நாட்டு மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதோடு, வங்கிக் கடன் செலுத்துவது, வரி செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. அதோடு, வரி செலுத்தியோருக்குத் திரும்பி வரவேண்டிய ரீஃபண்ட் தொகையையும் வருமான வரித் துறை வேகமாக வழங்கி வருகிறது.


அதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரையில் மொத்தம் 30.92 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1.06 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதில் தனிநபர் வருமான வரியாக மொத்தம் 29.17 லட்சம் பேருக்கு ரூ.31,741 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கார்பரேட் வரியின் கீழ் 1.74 லட்சம் பேருக்கு ரூ.74,729 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கருத்தில்கொண்டே ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்கி வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரையில் மொத்தம் 25.5. லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.95,853 கோடி வழங்கப்பட்டிருந்தது. இதில் தனிநபர் வருமான வரியாக மொத்தம் 23.9 லட்சம் பேருக்கு ரூ.29,361 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டது. அதேபோல, கார்பரேட் வரியின் கீழ் 1.63 லட்சம் பேருக்கு ரூ.66,493 கோடியும் வழங்கப்பட்டது. ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்குவது மட்டுமல்லாமல், நேர்மையாக வரி செலுத்துவோரைக் கௌரவிக்கும் புதிய திட்டத்தையும் மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக