Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 17 செப்டம்பர், 2020

சார் ஸ்கேட்டிங் பண்ணாம பல் பிடுங்க மாட்டீங்களோ? – பல் டாக்டருக்கு சிறை தண்டனை!

 Alaska

அமெரிக்காவில் ஹோவர்போர்டில் ஸ்கேட்டிங் செய்தபடியே நோயாளிக்கு பல் மருத்துவம் பார்த்த பல் மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பல் மருத்துவராக பணியாற்றி வருபவர் சேத் லோகார்ட். சமீபத்தில் இவரிடம் பல் ஒன்றை எடுக்க வேண்டும் என ஒருவர் வந்துள்ளார். அவருக்கு பல் எடுக்கும் சிகிச்சையின் போது சேத் ஹோவர்போர்டின் மீது நின்று ஸ்கேட்டிங் செய்து கொண்டே பல்லை எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் விசாரணையில் இதற்கு முன்னரும் பலருக்கு ஸ்கேட்டிங் செய்தவாரே மருத்துவம் பார்த்தது தெரிய வர நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக