Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 19 செப்டம்பர், 2020

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை போட்ட துபாய் அரசு!!

 

இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் ஒரே நாளில் 96,423 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 51,18,254 லிருந்து 52,14,677 ஆக அதிகரித்துள்ளது. 

 

இந்நிலையில், இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பறக்க 15 நாட்கள் தடை விதித்துள்ளது துபாய் அரசு. அதாவது இந்த தடை அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை உள்ளது. 

 

இந்தியாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் தொற்று பாதிக்கப்பட்ட 2 பேர் பயணம் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக