Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 19 செப்டம்பர், 2020

சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் பரிசு: இந்து மக்கள் கட்சி

 surya

நீட் தேர்வு குறித்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் காரசாரமான அறிக்கை வெளியிட்ட நிலையில் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் துணைத் தலைவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தர்மா என்பவர் பேசியபோது ’அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா என்றும், நீட் விவகாரத்தில் சூர்யா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார் என்றும், நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்குவார் என்றும் கூறியுள்ளார்

 

இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தர்மா அவர்களின் இந்த பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் இது குறித்து விவாதம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெட்டிசன்கள் தர்மாவுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

முன்னதாக நீட்தேர்வு மரணம் குறித்தும் ஏழை எளிய கிராம மக்களுக்கு நீட் தேர்வால் மருத்துவ கனவு நனவாகாமல் இருப்பது குறித்தும் நடிகர் சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பதும் இந்த அறிக்கை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக