Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 14 அக்டோபர், 2020

ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸின் இந்திய விலைகள்!

 

ஆப்பிள் ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் ஸ்டோரேஜ் விருப்பங்கள் மற்றும் இந்தியாவில் அவற்றின் விலைகள், இதோ...

ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 12 தொடர் மாடல்கள் அதன் "ஹை ஸ்பீட்" எனும் மெய்நிகர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய தொடரின் கீழ் மொத்தம் நான்கு ஐபோன் மாடல்கள் அறிமுகமாகி உள்ளன - ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகும்.

ஐபோன் 12 மினி புதிய தொடரில் மிகச் சிறிய மற்றும் மிகவும் மலிவு மாடலாக வந்தாலும், ஐபோன் 12 ஆனது ஐபோன் 11 மாடலின் வாரிசாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகியவை முறையே ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடலின் வாரிசுகளாக வெளியாகியுள்ளன.

இந்த 2020 ஐபோன் மாடல்கள் அனைத்துமே 5 ஜி ஆதரவுடன் வருகின்றன, மேலும் அவைகள் ஆப்பிளின் 14 பயோனிக் சிப்பால் இயக்கப்படுகின்றன. இந்த சமீபத்திய மாடல்கள் iOS 14 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்குகின்றன.

இந்தியாவில் ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை, விற்பனை தேதி:

ஐபோன் 12 மினி மாடலின் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.69,900 என்றும், அதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.74,900 என்றும் மற்றும் டாப்-எண்ட் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.84,900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக உள்ள ஐபோன் 12 மாடலின் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.79,900 என்றும், அதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.84,900 என்றும் மற்றும் அதன் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.94,900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக உள்ள ஐபோன் 12 ப்ரோ மாடலின் பேஸ் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.1,19,900 என்றும், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்கள் முறையே ரூ.1,29,900 மற்றும் ரூ.1,49,900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

கடைசியாக உள்ள ஐபோன் 12 புரோ மேக்ஸ் மாடலின் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடானது ரூ.1,29,900 என்றும், அதன் 256 ஜிபி விருப்பமானது ரூ.1,39,900 என்றும் மற்றும் இதன் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.1,59,900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்கள் ஆனது கருப்பு, நீலம், பச்சை, ப்ராடெக்ட் (ரெட்) மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களானது தங்கம், கிராஃபைட், பசிபிக் நீலம் மற்றும் வெள்ளி ஆகிய வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும். புதிய ஐபோன் 12 தொடருடன், ஆப்பிள் தனது புதிய தயாரிப்புகளாக ஹோம் பாட் மினி மற்றும் மேக்ஸாஃப் வயர்லெஸ் சார்ஜரையும் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!