Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 7 ஜனவரி, 2021

வீட்டை தியேட்டராக மாற்ற சிறந்தது எது?- Soundbar vs Home Theatre: சுத்தி சுத்தி அடிக்கும் சத்தம்!

எஸ்பி போர்ட்

இந்தியாவில் ஹோம் தியேட்டர் மற்றும் சவுண்ட் பார் போன்ற சாதனங்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஹோம் தியேட்டர் சாதனங்கள் தரமான சக்தி வாய்ந்த பொருள்களால் தயாரிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஹோம் தியேட்டரும் ஊபர் என்ற அமைப்பையும் கொண்டிருக்கும், இது நம் மனதைக் கிளர்ந்து எழச் செய்து விடும். இதன் மத்திய பகுதி எல்சிடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும்.

ஹோம் தியேட்டரில் யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளதால் பென்ட்ரைவ்களைப் பயன்படுத்த முடியும். பின்பு இப்போது வரும் புதிய புதிய ஹோம் தியேட்டர் சாதனங்களில் இன்னும் சில தொழில்நுட்பங்கள் இடம்பெறுகின்றன. அதேபோல் இன்றைய மாடர்ன் உலக மக்கள் படங்களை தரமான சவுண்ட் குவாலிட்டியுடன் பார்க்க விரும்புகின்றனர். வீட்டில் டிவி, கம்பியூட்டர் போல் ஹோம் தியேட்டரும் அதிகரித்து வருகிறது. ஹோம் தியேட்டரின் உதவியுடன் மக்கள் வீட்டிலேயே தியேட்டர் எபெக்டில் படம் பார்க்கின்றனர். மல்டிமீடியா 5.1 ஸ்பீக்கர் சிஸ்டம் சவுண்ட் குவாலிட்டியை அதிகபடுத்தி கொடுக்கிறது. மேலும் எல்ஜி, Philips, Sony உள்ளிட்ட சில நிறுவனங்கள் இப்போது அதிநவீன ஹோம் தியேட்டர் தயாரித்து விற்பனை செய்துவருகிறது.

அதேபோல் ஹோம் தியேட்டர் விட சிறந்த ஆடியோ அனுபவம் கொடுக்கும் சவுண்ட் பார் சாதனங்களும் உள்ளது. ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களை வைக்க போதுமான இடம் இல்லாதவர்களுக்கு அல்லது இவைகளை வைக்க விரும்பாதவர்களுக்கு அல்லது பெரிய செலவை குறைக்க விரும்புவர்களுக்கு உயர்தர ஒலியை வழங்கும் ஒரு பட்ஜெட் சாதனம் தான் இந்த சவுண்ட் பார்.

குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட் டிவிகளில் இருக்கும் ஆடியோ வசதி ஒரளவு தரம் மட்டுமே வழங்கும். ஆனால் தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்க இதுபோன்ற ஹோம் தியேட்டர் மற்றும் சவுண்ட் பார் சாதனங்கள் தான் அதிகம் உதவுகின்றன.



ஹோம் தியேட்டர் வாங்கினால் ஸ்பீக்களர் வைக்க தனித்தனி இடம் தேவைப்படும். ஆனால் இந்த சவுண்ட்பார் சாதனத்தை ஒரே இடத்தில் வைத்து அருமையாக பயன்படுத்த முடியும். அதுவும் சிறந்த தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும்.

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை சற்று உயர்வான விலையில் வாங்கினாலும் கூட அதன் ஆடியோ தரம் சராசரியாக இல்லாவிட்டால், நீங்கள் ஒரு சவுண்ட்பாரை வாங்க வேண்டிய கட்டயாம் ஏற்படும். குறிப்பாக சவுண்ட்பார்கள் வெவ்வேறு விலை வரம்புகளில் வாங்க கிடைக்கிறது மற்றும் இதன் நோக்கம் உங்களது டிவியை சிறப்பாக ஒலிக்கச் செய்வதே ஆகும். பின்பு வழக்கமான ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்கள் உடன் இதை ஒப்பிட வேண்டாம் அல்லது சவுண்ட் பாரை ஒரு ஸ்பீக்கர் என தவறாக எண்ண வேண்டாம். அதாவது சிறந்த தரமான வசதிகளுடன் உருவாக்கப்படுகின்றன சவுண்ட் பார் சாதனங்கள்.


மேலும் சவுண்ட்பார்கள்கள் டிவி ஆடியோவிற்கு மட்டுமானதாகும். உரையாடல்கள் தெளிவாகவும், திரையில் நடிகர்களின் குரல் மிருதுவாகும் ஒலிக்க வைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். அதேபோல் ஆக்ஷன் திரைப்படத்தைப் பார்க்கும்போது, பின்னணி இசை மிக அதிகமாக இருக்கும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், ஹோம் தியேட்டர் சாதனங்களை விட மிகத் துல்லியமான ஒலியை தரும் இந்த சவுண்ட்பார்கள்கள்.

ஹோம் தியேட்டரில் உள்ள பூம் பூம் ஸ்பீக்கர்களை விட இந்த சவுண்ட்பார்கள்கள் தரமான ஒலியை வழங்கும். மேலும் நீங்கள் ஒரு நல்ல சவுண்ட்பாரை வாங்க விரும்பினால் குறைந்தபட்சம் 3 சேனல்களைக் கொண்ட சவுண்ட்பாரை தேர்வு செய்யவும். அதெல்லாம் சரி சவுண்ட்பாரில் உள்ள சேனல்கள் என்றால் என்ன?

அதாவது 2-சேனல் சவுண்ட்பார் ஆனது இரண்டு ஸ்பீக்கர்களை வழங்குகிறது. ஒன்று இடது புறம் இருக்கும் மற்றொன்று வலதுபுறம் இருக்கும். அதேபோல் 3-சேனல் மாடலில் கூடுதலாக மையத்தில் ஒரு ஸ்பீக்கர் இருக்கும். பின்பு இருப்பதிலேயே சிறந்த சவுண்ட் அவுட்புட்டிற்கு 5-சேனல் அல்லது 7-சேனல் பதிப்பை தேர்வுசெய்யலாம்.

குறிப்பாக நீங்கள் டிவி மாடலுக்கு ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களை தேர்வுசெய்வதை விட, அதிநவீன சவுண்ட்பார் சாதனங்களை தேர்வு செய்வதே நல்லது. அதாவது சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் சவுண்ட்பார் சாதனங்கள் உருவாக்கப்படுகின்றன.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக