Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 14 அக்டோபர், 2020

பட்ஜெட் விலையில் ரெட்மி 65-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! முழுவிவரம்.!

தற்சமயம் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை மட்டுமே

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி ஏ65 எனும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. தற்போது ரெட்மி ஸ்மார்ட் டிவிகளும் வரிசையாக அறிமுகம் செய்யப்படுவதால் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த மாதம் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ தொடர் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்தது. ஆனால் 32-இன்ச் மற்றும் 65-இன்ச் என இரண்டு அளவுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்சமயம் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை மட்டுமே அறிமுகம் செய்துள்ளது ரெட்மி நிறுவனம்.

 

இப்போது வெளிவந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ65 மாடல் ஆனது 4கே தீரமானம் மற்றும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் மிகவும் மெலிதாக இருக்கிறது மற்றும் குறுகிய பெஸல்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஏ65 ஸ்மார்ட் டிவி MIUI மூலம் இயங்குகிறது.

 

ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஏ65 மாடலானது 4கே (3,840x2,160 பிக்சல்கள்) தெளிவுத்திறனுடன் 65-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எனவே சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் 178 டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 

இந்த ஸ்மார்ட் டிவியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 64 பிட் குவாட்-கோர் கோர்டெக்ஸ்-ஏ 53சிபியு மற்றும் மாலி ஜி52 ஜிபீயூ வசதி இடம்பெற்றுள்ளது. இந்த மென்பொருள் வசதி மிக அருமையாக செயல்படும். பின்பு எச்டிஆர் ஆதரவையும் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

 

ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ65 மாடலில் 1.5ஜிபி ரேம் மற்றும் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் 2.4GHz வைஃபை, இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், ஒரு எஸ் எஸ்/பி.டி.ஐ.எஃப் போர்ட் மற்றும் ஏவி போர்ட் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

 

புதிய ரெட்மி ஏ65 மாடலில் டி.டி.எஸ்-எச்டியை ஆதரிக்கும் இரண்டு 8வாட் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது. இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த டிவி A65 ஆனது டிவி 3.0க்காக MIUI மூலம் இயக்கப்படுகிறது மற்றும் எம்ஐ ஆப் ஸ்டோர் மற்றும் சில முன்பே நிறுவப்பட்ட பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.

 

ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ 65 மாடல் ஆனது CNY 2,599 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.28,300 க்கு அறிமுகம் ஆகியுள்ளது. மேலும் சீனாவின் ஜே.டி.காம் மற்றும் யூபின் மூலம் இந்த சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட் டிவி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் 


  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!