ராசியில் புதன்!!
👉 ஒருவருடைய உயர்வு என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லை என்றும், அவரவர் முயற்சிகளில் மட்டுமே உள்ளது எனவும் இந்த வையகம் உணரும் வண்ணம் இருந்தவர் புதன் பகவான். நவகிரகத்தில் கலைகளுக்கு அதிபதியாக விளங்கக்கூடியவரும் இவரே.
👉 தன்னுடைய சுய முயற்சிகளால் ஆயக் கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சி பெற்றவர் இவர்தான். கணிதம், நுணுக்கம் மற்றும் ஜோதிடம் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொண்டவரும் இவர்தான்.
புதன் கிரகத்தை பற்றிய சில குறிப்புகள் :
தந்தை : சந்திரன்
தாய் : தாராதேவி
உகந்த நாள் : புதன்கிழமை
புதன் பிரதி அதிபதி : மகாவிஷ்ணு
புதனின் மனைவி : நிலையாக யாரும் இல்லை. (சாபத்தால் பெண்ணாக மாறிய இளன்)
வசிக்கும் இடம் : கலையழகு நிறைந்த இடம்
வலிமை உடைய பொழுது : அனைத்து நேரங்களிலும்
ராசியை கடக்கும் காலம் : 1 மாதம்
புதனுக்கு நட்பு கிரகங்கள் : சூரியன், சுக்கிரன்
புதனுக்கு பகை கிரகம் : சந்திரன்
புதனுக்கு சமமான கிரகங்கள் : செவ்வாய், குரு, சனி, ராகு, கேது
புதனின் தசா காலங்கள் : 17 வருடங்கள்
புதனின் நட்சத்திரம் : ஆயில்யம், கேட்டை, ரேவதி
புதனின் குணங்கள் :
👉 புதன் என்பவர் சுப மற்றும் அசுப தன்மையை கொண்டவர். அதாவது இவர் முழு சுபரும் இல்லை, முழு பாபரும் இல்லை.
👉 இவரின் சுப மற்றும் அசுப தன்மையானது இவருடன் இணையும் கிரகங்களின் நிலையினைக் கொண்டதாகும்.
👉 ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் புதனின் நிலை நல்ல முறையில் இருக்கும் பட்சத்தில் அவர் எல்லாவிதமான பிரச்சனைகளையும் சாதுர்யமாக பேசி தீர்த்து வாழ்க்கையில் வெற்றி அடையக்கூடியவர்.
👉 புதன் ஒவ்வொரு ராசியிலும் இருக்கும்போது அவரால் உண்டாகும் சுப மற்றும் அசுப பலன்களை இனி வரும் நாட்களில் நாம் விரிவாக காண்போம்.
மேஷ ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
🌟 மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். செவ்வாயுடன் புதன் சமம் என்ற நிலையில் நின்று மேஷ ராசியினருக்கு புரியும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
🌟 பொருட்களை ஈட்டும் திறமை உடையவர்கள்.
🌟 தன்னிடம் எல்லாம் இருப்பதாக காட்டிக்கொள்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் மட்டுமே.
🌟 மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு பொருள் விரயத்தை அளிக்கக்கூடியவர்கள்.
🌟 பொதுக்கூட்டம் மற்றும் மேடைப்பேச்சுகளில் வல்லவர்கள்.
🌟 அடிக்கடி முடிவுகளையும், எண்ணங்களையும் மாற்றக்கூடியவர்கள்.
🌟 பொது நலத்தை விட சுயநலமே அதிகம் கொண்டவர்கள்.
🌟 மற்றவர்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.
🌟 கட்டுக்குள் அடங்காத அபரி விதமான மனோ வேகத்தினை உடையவர்கள்.
🌟 இடத்திற்கு இடம் அதாவது சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறக்கூடியவர்கள்.
🌟 பிறருடைய செயல்கள் மூலம் தன் வேலையை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 எதற்கும் கவலைக்கொள்ள மாட்டார்கள்.
🌟 விடாமுயற்சி உடையவர்கள்.
🌟 எதிர்பாலின மக்களை கவர்வதில் வல்லவர்கள்.
🌟 சங்கீத துறையில் ஆர்வம் உடையவர்கள்.
🌟 வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
🌟 விசித்திரமான கற்பனைகளை உடையவர்கள்.
🌟 சிக்கனமாக வாழக்கூடியவர்கள்.
🌟 தனக்கு தேவை என்றால் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக