Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 அக்டோபர், 2020

ஒரு ரப்பரின் கதை... படித்ததில் பிடித்தது... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------

சிரிங்க சிரிங்க...!!

------------------------------------------------

அலுவலகம் ஒன்றில் டைப்பிஸ்ட்டுக்கும், குமாஸ்தாவிற்கும் இடையே சண்டை நடந்தது.

டைப்பிஸ்ட் : நீ ஒரு முட்டாள்!

 குமாஸ்தா : போடா, நீ முட்டாள்!

டைப்பிஸ்ட் : போடா, நீ தான்டா முட்டாள்!

மேனேஜர் : என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருக்குறது உங்களுக்கு தெரியலையா?

மற்ற இருவரும் : 😆😆

------------------------------------------------

டாக்டர் : என்ன ஆச்சு?

பாட்டி : மாடிப்படி ஏறும்போது கால் இடறி கீழே விழுந்துட்டேன் டாக்டர்...

டாக்டர் : பாட்டி இனிமே ஆறுமாசத்துக்கு மாடிப்படி ஏறக்கூடாது.

பாட்டி : சரிங்க டாக்டர்.

டாக்டர் : (ஆறுமாதம் கழித்து) பாட்டி இனிமே தாராளமா மாடிப்படி ஏறலாம். கால் நல்லாயிடுச்சி

பாட்டி : அப்பாடா... இப்பவாவது சொன்னிங்களே... எத்தன நாளைக்குத்தான் பைப் வழியா ஏறி இறங்குறது.

டாக்டர் : 😜😜

------------------------------------------------

டீச்சர் : ஏன்டா நேத்து ஸ்கூலுக்கு வரல?

மாணவன் : எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை டீச்சர்.

டீச்சர் : அப்போ... அவரு தான்டா லீவு போடணும். நீ எதுக்கு லீவு போட்ட?

மாணவன் : அவருதான் அம்மாக்கிட்ட தனியா இருக்கறதுக்கு பயமா இருக்கு. அதனால நீ கூட இருன்னு சொன்னாரு டீச்சர்.

டீச்சர் : 😉😉

------------------------------------------------

படித்ததில் பிடித்தது.!!

------------------------------------------------

ரப்பரைப் பார்த்து பென்சில் சொல்கிறது. ஒவ்வொரு முறை நான் செய்யும் தவறுக்கும், என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய். ஆனால் என்னை சுத்தம் செய்யும் போது நீ தேய்ந்துக் கொண்டே போகிறாயே, அது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று. 

 

ரப்பர் அதற்கு, அது என் கடமை, நான் படைக்கப்பட்டதே அதற்குத் தான். என்னைக் கண்டு நீ வருந்த வேண்டாம். இதில் எனக்கு முழு மகிழ்ச்சி. என்னால் உன் தவறுகள் அழிக்கப்பட்டு, நீ திருத்தங்களுடன் முன்னேறி சென்றால் அதுவே என் வெற்றி. நான் தேய்வதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்றது.

அந்த ரப்பர் வேறு யாருமில்லை. நம் பெற்றோர் தான். அவர்கள் ஆயுள் முடியும் வரை நம் தவறுகளை திருத்திக் கொண்டே ரப்பார்கள்... நம் மீது பொறாமைப்படாத இரு உள்ளங்கள் நம் பெற்றோர்கள்..உங்கள் நிறுவனத்திற்கு திறமையான பணியாட்களை நிரப்ப விரும்புகிறீர்களா? 

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!