Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 21 அக்டோபர், 2020

ஜவ்வரிசி அல்வா

 

தேவையான பொருட்கள்:

 

நெய் - 100 கிராம்

ஜவ்வரிசி - அரை கப்

பால் - ஒரு கப்

தண்ணீர் - ஒரு கப்

சர்க்கரை - ஒரு கப் 

குங்குமப்பூ - சிறிதளவு (பாலில் ஊறவைத்தது)

முந்திரி, திராட்சை சிறிதளவு(வறுத்தது)

ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்

 

செய்முறை:

 

குக்கரில் சிறிதளவு நெய்விட்டு அரை கப் ஜவ்வரிசியை போட்டு மிதமான சூட்டில் மூன்று நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

 

ஒரளவு வதங்கிய பின் அத்துடன் ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து இரண்டு விசில் விடவும்.

 

ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து ஜவ்வரிசி நன்கு வெந்திருக்கிறதா என்று பார்க்கவும். வேகவில்லை என்றால் இன்னும் ஒன்றிரண்டு விசில்கள் விடலாம்.

 

பின்பு ஒரு நான்ஸ்டிக் கடாயில் இந்தக்கலவையை ஊற்றி அத்துடன் எடுத்து வைத்துள்ள சர்க்கரை, குங்குமப்பூ போன்றவற்றை சேர்த்து, தேவையான அளவு நெய்யும் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

 

நெய் கடாயின் ஓரத்தில் பிரிந்து வரும்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

 

வேறொரு பாத்திரத்திற்கு அல்வாவை மாற்றி வைக்கும் பொழுது அல்வா அதிகம் கெட்டியாவது தவிர்க்கப்படும். சூப்பரான ஜவ்வரிசி அல்வா.தயார் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!