Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 17 அக்டோபர், 2020

உங்க பெஸ்ட் பிரண்ட் இப்படி நடந்துக்கிட்டா அவங்க உங்கள காதலிக்க தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!

  Signs Your Best Friend Is in Love With You

பொதுவாக தங்கள் வாழ்க்கைத்துணையை தங்களுடைய நட்பு வட்டாரத்தில் தேடுவது என்பது மிகவும் இயல்பானது மற்றும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால் வேறுவழியில் யோசிக்கும்போது இதற்காக நீங்கள் அசௌகரியமாகவும், தர்மசங்கடமாகவும் உணரலாம். நட்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடங்குவது. நட்பில் எதிர்பார்ப்புகள், பாதுகாப்பின்மை, சந்தேகம், நம்பிக்கை பிரச்சினைகள் என்று எந்த பிரச்சினையும் இல்லாமல் தங்களின் ஆர்வம் மற்றும் அன்பால் பிணைக்கப்பட்டுள்ளனர்.

நண்பருடன் பகிரப்பட்ட யோசனைகள் மற்றும் தருணங்கள், சில நேரங்களில் காதலாக மாறும். அனைத்து நட்பும் காதலாக மாற வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் அனைத்து விதத்திலும் தனக்கு பொருந்தக்கூடிய தங்களின் சிறந்த நண்பரிடம் காதலில் விழுவதில் தவறும் இல்லை அதில் ஆச்சரியப்படவும் எதுவுமில்லை. நீங்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிடுகிறீர்கள், பல சிறந்த நினைவுகளை ஒன்றாக உருவாக்கி, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய அம்சங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். உங்களின் பெஸ்ட் பிரண்ட் உங்களை காதலிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்பதை அவர்களின் சில நடவடிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதிக பாசம் காட்ட தொடங்குவது

வழக்கமாக நீங்கள் உங்கள் சிறந்த நண்பருடன் இருக்கும்போது அந்த தருணம் மிகவும் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருக்கும். ஆனால் அவர்கள் உங்களிடம் அதிக காதல் மற்றும் பாசமாக மாறிவிட்டால், அது நிச்சயமாக அவர்கள் உங்களை காதலிக்க தொடங்கியதற்கான அறிகுறியாகும். அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்துவது ஒரு நண்பர் செய்ய வேண்டிய ஒன்றல்ல, நீங்கள் நிச்சயமாக வித்தியாசத்தை உணர முடியும்.

உங்களை எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பது

யாரோ ஒருவர் உங்களை காதலிக்கிறார் அல்லது ஏற்கனவே உங்களை காதலிக்க தொடங்கி விட்டார் என்பதற்கான மிகச் சிறந்த அறிகுறி இது. உங்கள் சிறந்த நண்பர் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்தால் அவர்களின் இதயங்களில் ஏதோ ஒரு மாற்றம் உருவாகியுள்ளது. இது அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள் என்பதைக் குறிக்கும் மற்றொரு அறிகுறியாகும், ஆனால் அதை வெளிப்படுத்த வெட்கப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வழக்கத்திற்கு மாறாக அதிக கவனத்துடன் இருப்பது

உங்கள் நண்பர் வித்தியாசமாக அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிக கவனத்துடன் உங்களிடம் நடந்து கொள்கிறார்களா? ஆம் எனில், அது அவர்கள் உங்களை காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும். எல்லா நேரங்களிலும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் இருப்பது இயல்பானது என்றாலும், இந்த நண்பர் உங்களைப் பிரியப்படுத்தவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார். நீங்கள் சொல்வதற்கு அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள், அவர்கள் உங்கள் தேவைகளுக்கு முனைப்புக் காட்டுவார்கள்.

பொறாமையை வெளிப்படுத்துவது

பொறாமை என்பது ஒரு பொதுவான உணர்ச்சியாகும், நீங்கள் எந்த உறவில் இருந்தாலும் அது இயற்கையாகவே யாருக்கும் ஏற்படலாம். ஆனால் யாரோ ஒருவர் மகிழ்ச்சியாகவோ அல்லது கடலை போடவோ உங்களை அணுகும்போது உங்கள் நண்பர் பொறாமைப்படுகிறார் என்றால் அது வெறும் நட்பு மட்டுமல்ல.

அவர்களின் செயல்கள் மற்றும் தோற்றம் குறித்து அதிக விழிப்புடன் இருப்பது

நாம் நேசிக்கும் ஒருவர் முன் நம்முடைய தோற்றம் சிறப்பானதாக இருக்க வேண்டுமென்று விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா? உங்கள் சிறந்த நண்பர் உங்களை நேசிக்கிறார் என்றால், உங்கள் நண்பர் உங்களைச் சுற்றிலும் எப்போது செயல்படுவார் மற்றும் உங்களுக்கு பிடித்த விதத்தில் உடை அணிய எப்போதும் அதிக முயற்சிப்பார்கள்.

மற்றவர்கள் மீது ஆர்வமின்றி இருப்பது

நண்பர்கள் வழக்கமாக அவர்களின் காதல் வாழ்க்கை, அவர்களின் ரகசிய அபிமானிகள், அவர்களின் புதிய க்ரஷ் மற்றும் பலவற்றைப் பற்றி விவாதிக்கிறார்கள். இருப்பினும், உங்கள் சிறந்த நண்பர் இதைப் பற்றி விவாதிக்காமல் ஊமையாக இருந்தால், உங்களைப் பற்றி மட்டுமே பேச ஆர்வமாக இருந்தால், அவர்கள் ஆம் அவர்கள் உண்மையில் உங்கள் மீது தீவிரமாக காதலில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

உங்களுடன் நேரம் செலவிட காரணங்களை தேடுவது

பொதுவாக நாம் நண்பர்களுடன் கணிசமான நேரத்தை செலவிடுவோம். இருப்பினும், உங்கள் சிறந்த நண்பர் உங்களுடன் தனியாக சில தரமான நேரத்தை செலவழிக்க கடுமையாக முயற்சித்து, சம்பந்தமில்லாத காரணங்களைச் சொன்னால், அவர்கள் உண்மையிலேயே உங்கள் காதலிக்கத் தொடங்கி விட்டார்கள் என்று அர்த்தம்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!