தனுசு ராசியின் அதிபதி குரு ஆவார். செவ்வாய் குருவுடன் நட்பு என்ற நிலையில் நின்று அளிக்கும் சுப மற்றும் அசுப பலன் பின்வருமாறு :
👉 கீர்த்தி உடையவர்கள்.
👉 பெரியவர்களுக்கு உரிய மரியாதையை எந்நிலையிலும் அளிக்கக்கூடியவர்கள்.
👉 செல்வாக்கு நிறைந்தவர்கள்.
👉 எடுத்த காரியத்தில் உள்ள நிறை மற்றும் குறைகள் அறிந்து அதற்கு ஏற்றாற்போல் செயல்பட கூடியவர்கள்.
👉 விரும்பிய பொருளை வாங்கி மகிழக்கூடியவர்கள்.
👉 எதிலும், எங்கும் தாராளமாக செலவு செய்யக்கூடியவர்கள்.
👉 விவேகமும், துடிப்பும் கொண்டவர்கள்.
👉 கடுஞ்சொற்களையோ, அவச்சொற்களையோ தாங்க இயலாதவர்கள்.
👉 நிர்வாகத்திறன் உடையவர்கள்.
👉 நிறைகுடம் தழும்பாது என்பது போல சிறந்த குணநலன்களை உடையவர்கள்.
👉 இறைவழிபாடு மற்றும் இறை சம்பந்தமான பணிகளை செய்வதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள்.
👉 மனதில் நினைப்பதை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்.
👉 சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவ கூடியவர்கள்.
👉 தன் குல பெருமையை எவ்வகையிலும் கெடாமல் பார்த்துக்கொள்ள கூடியவர்கள்.
👉 வீர தீர செயல்களை புரிவதில் விருப்பம் உடையவர்கள்.
👉 பொருள் ஈட்டும் வல்லமை உடையவர்கள்.
👉 பெருந்தன்மையான குணத்தை உடையவர்கள்.
👉 மற்றவர்களுக்கு உதவுதல் மற்றும் பொதுச்சேவை செய்வதில் விருப்பம் உடையவர்கள்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக