Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 17 அக்டோபர், 2020

மீன ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!


👉 மீன ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். செவ்வாய் குருபகவானுடன் நட்பு என்ற நிலையில் நின்று அளிக்கும் சுப மற்றும் அசுப பலன் பின்வருமாறு :

👉 கல்வியில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

👉 எடுத்த முயற்சிகளில் ஆதாயம் காணக்கூடியவர்கள்.

👉 எனினும் கற்ற கல்விக்கு தொடர்பில்லாத வேலை வாய்ப்புகளே இவர்களுக்கு அமைகின்றது.

👉 அதிகாரம் கலந்தப் பேச்சுகளை உடையவர்கள்.

👉 பேசுகின்ற பேச்சுகளில் விஷயத்துடன் ஞானமும் கொண்டு இருப்பவர்கள்.

👉 கொடுத்த வாக்குறுதியை எந்நிலையிலும் நிறைவேற்றக்கூடியவர்கள்.

👉 எடுத்த முடிவுகளில் எவருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாதவர்கள். 

👉 கொள்கை பிடிப்பு குணம் கொண்டவர்கள். 

👉 குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

👉 நம்பிக்கைக்குரியவர்கள். யாரையும் ஏமாற்றமாட்டார்கள். 

👉 மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளக்கூடியவர்கள். 

👉 எதையும் நன்கு சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

 

👉 அழகான ஆடை, ஆபரணங்களை அணிந்து தன்னை உயர்வாக காட்டிக் கொள்ளக்கூடியவர்கள். 

👉 இடமறிந்து முன்கோபத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும், வல்லமையும் உடையவர்கள்.

👉 மறைமுகமாக பொதுச் சேவை செய்வதில் விருப்பம் உடையவர்கள். விளம்பரத்தை விரும்பாதவர்கள்.

👉 எதிலும் துடிதுடிப்பு கொண்டவர்கள். எனினும் தனிமையை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள்.

👉 திருத்தல பணிகளை செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

👉 எவராலும் கண்டறிய இயலாத சில ரகசிய செயல்பாடுகளை கொண்டவர்கள்.

 

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!