ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன. அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம். அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது. மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக ஒருநாள் முயல் தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது. முதலில் இல்லை எனக்கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்க வேண்டுமென நினைத்து சரி என்றது.
பல மிருகங்களுக்கு இடையில் போட்டி ஆரம்பமானது. ஒரு முடிவிடமும் அறிவிக்கப்பட்டது. முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது. ஆமையோ மிகவும் மெதுவாகவே சென்றது. முக்கால்வாசி தூரம் ஓடி முடித்த முயல் ஆமை மெதுவாக வருவதைக்கண்டு ஒருமரத்தின் கீழ் நித்திரை செய்தது. ஆமையோ மெது மெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது.
அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல், ஆமை எல்லையை நெருங்கியதை கண்டு ஓட்டம் பிடித்தது. எனினும் முயலுக்கு முதல் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது.
நீதி :
நிதானம் பிரதானம்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக