Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 17 அக்டோபர், 2020

தீக்குச்சியும்... விளக்கும்.... எது சிறந்தது?... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

---------------------------------------------------------------

ராமு : அந்த பொண்ண துரத்தி துரத்தி காதலிச்சியே.. இப்போ எந்த அளவுல இருக்கு உன் காதல்..

பாபு : அட நீ வேறடா.. அவளோட அண்ணனுங்க இப்போ என்னை துரத்திக்கிட்டு இருக்காங்க..

ராமு : 😂😂

---------------------------------------------------------------

கணவன் : என்னம்மா இது இவ்ளோ பெரிய கடிதம்?

மனைவி : சுதா தான் எழுதியிருக்கா!

கணவன் : அப்படி என்னதான் எழுதியிருக்கா?

மனைவி : சேதிகளை நேரில் பார்க்கும்போது சொல்கிறேன், கடிதம் எழுத நேரமில்லைன்னு...!

கணவன் : 😬��

---------------------------------------------------------------

அருண் : என்ன சார் நீங்க? டீயில ஒரு ஈ செத்துக்கிடக்கறதுக்கு போயி ரொம்ப கோபப்படுறீங்க?

குமார் : அப்போ ஈ செத்துக்கிடக்கறது அவ்ளோ சாதாரண விஷயமா?

அருண் : பின்ன.. அதோ போறாரே.. அவர் சாப்பிட்ட பிரியாணில ஒரு பல்லியே செத்துக்கிடந்தது... அவரே சும்மா போறாரு.

குமார் : 😳😳

---------------------------------------------------------------

இப்படி மட்டும் செய்யாதீர்கள்...!!

---------------------------------------------------------------

முடிந்ததையும் சரி...

நடந்ததையும் சரி...

எப்போதும் நினைவில் கொண்டு வராதீர்கள்...

நிம்மதி என்ற நிழலைக்கூட நெருங்க முடியாது...

---------------------------------------------------------------

படித்ததில் பிடித்தது...!!

---------------------------------------------------------------

தீக்குச்சி விளக்கை ஏற்றியது, 

எல்லோரும் விளக்கை வணங்கினார்கள்...

ஆனால் ஒருவன் மட்டும் கீழே எறியப்பட்ட தீக்குச்சியை வணங்கினான்...

அவனிடம் ஏன் தீக்குச்சியை வணங்குகிறாய்? என்று கேட்டதற்கு...

ஏற்றப்பட்டதை விட, ஏற்றி வைத்தது உயர்ந்தது அல்லவா?... என்று பதில் கூறினான்.

---------------------------------------------------------------

எவையெல்லாம் பயனற்றது தெரியுமா?

---------------------------------------------------------------

கடலில் பெய்யும் மழை பயனற்றது...

பகலில் எரியும் தீபம் பயனற்றது...

வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது...

நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது...

அதுபோல் முட்டாள்களுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது...!!

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!