----------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!
----------------------------------------------
கமல் : ஒருத்தரை சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க..
விமல் : ஏன்?
கமல் : பஸ்ஸில் தொங்கிக்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.
விமல் : 😐😐
----------------------------------------------
ஆசிரியர் : ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு?
மாணவன் : ஐந்து ரூபாயில் பெரிய ஓட்டை-ன்னு அர்த்தம் சார்.
ஆசிரியர் : 😡😡
----------------------------------------------
அருண் : ஒரு டாக்டர் கதை எழுதினா எப்படி அத்தியாயம் பிரிப்பாரு?
குமார் : சாப்பாட்டுக்கு முன்பு - சாப்பாட்டுக்கு பின்புன்னு..!
அருண் : 😦😦
----------------------------------------------
ஆசிரியர் : பட்டுப்பூச்சியிலிருந்து எதை எடுக்குறாங்க..?
மாணவன் : உயிரை எடுக்குறாங்க சார்..!
ஆசிரியர் : 😠😠
----------------------------------------------
ஏன் தெரியுமா?
----------------------------------------------
சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில் ✏ உபயோகித்தோம்...
பெரியவர்களாக ஆன பின் பேனா ✒ உபயோகிக்கிறோம்...
ஏன் தெரியுமா?🤔
சிறுவயதில் செய்யும் தவறுகளை அழிக்க முடியும்...
ஆனால் வயதான பின்னர் செய்த தவறை அழிக்க முடியாது....!
----------------------------------------------
சிந்தனை வரிகள்...!!
----------------------------------------------
☀ எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ, அதை அஞ்சாமல் எதிர்த்து நில்.
☀ வெற்றி என்பது பெற்றுக்கொள்வதற்கு... தோல்வி என்பது கற்றுக்கொள்வதற்கு.
☀ நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை, யாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்.
----------------------------------------------
குறளும்... பொருளும்...!!
----------------------------------------------
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
விளக்கம் :
ஒருவருக்கு ஒரு நன்மையையும் நாம் செய்யாத போதும் அவர் நமக்கு உதவினால், அதற்கு கைமாறாக மண்ணுலகையும், விண்ணுலகையும் கொடுத்தாலும் சமமாகாது.
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக