Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 நவம்பர், 2020

அதீத மர்மங்கள் நிறைந்த "லோனார் ஏரி"- சர்வதேச ராம்சர் பட்டியலில் இணைப்பு: அடுத்தது என்ன?

லோனார் ஏரி

50,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் அதீத மர்மங்கள் நிறைந்த லூனார் ஏரி ராம்சர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

லோனார் ஏரி

லோனார் ஏரி மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள அவுரங்காபாத்தில் இருந்து நான்கு மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் லோனார் ஏரி, 1823 ஆம் ஆண்டில் சி.ஜே.இ அலெக்சாண்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியால் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முழு வட்டவடிவ ஏரி

லோனார் ஏரி சுமார் 150 மீட்டர் (500 அடி) ஆழமும், சராசரியாக 1,830 மீட்டர் (6,000 அடி) விட்டமும் கொண்டது.இந்த முழு வட்டவடிவ ஏரி, அதனை சுற்றியுள்ள பகுதியை விட அதிக காந்த அளவீடுகளின் சான்றுகளைக் காட்டுகிறது.

113 ஹெக்டேர் அளவு கொண்ட லோனார் ஏரி

லோனார் பள்ளம் என்பது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் போது பூமியின் தாக்கத்துடன் ஒரு சிறுகோள் மோதலால் உருவாக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். லோனார் பள்ளம் என்றும் அழைக்கப்படும் இந்த 113 ஹெக்டேர் அளவு கொண்ட லோனார் ஏரி இந்தியாவின் ஒரு முக்கியமான தனித்துவமான புவியியல் தளம் என்பது பலருக்கும் தெரியப்படாத உண்மை.

வெப்பநிலை உருமாற்றத்தின் போது உருவாகும் தாதுக்கள்

இந்த ஏரி மற்றும் அதன் நீரை ஆய்வு செய்யும் போது, ​​உள்ளூர் புவியியலாளர்கள் அதிக அழுத்தம், உயர் வெப்பநிலை உருமாற்றத்தின் போது உருவாகும் தாதுக்கள் மற்றும் பாறை துண்டுகளைக் கண்டறிந்தனர். விஞ்ஞானிகள் மாஸ்கெலைனைட் போன்ற அசாதாரண தாதுக்களைக் கண்டுபிடித்தனர்.

விண்கல் பூமியைத் தாக்கியபோது உருவானது

மணிக்கு 90,000 கிமீ வேகத்தில் நகரும் 2 மில்லியன் டன் எடைகொண்ட விண்கல் பூமியைத் தாக்கியபோது லோனார் ஏரி உருவானது என்பதற்கு போதுமான அறிவியல் சான்றுகள் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. எப்போது இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பது நிச்சயமற்றது. ஆனால் விஞ்ஞானிகள் 35,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கலாம் என்று மதிப்பிடுகின்றனர்.

பச்சை நிறத்தில் இருந்து பிங்க் நிறமாக மாறிய ஏரி

சமீபத்தில் லோனார் ஏரி பச்சை நிறத்தில் இருந்து பிங்க் நிறமாக மாறியது. இந்திய வன அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் இந்த சம்பவம் சற்று குழப்பமடையச் செய்தது. ஏனெனில், சாதாரண நாட்களில் லோனார் ஏரியின் நீர் பச்சை நிறத்தில்தான் காணப்படும். இருப்பினும், லோனார் ஏரியின் இந்த நிற மாற்றம் சம்பவம் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது என்றும், இது முதல் முறை அல்ல என்றும் வல்லுநர்கள் கூறினர். ஆனால், பிங்க் நிறமாக மாறியது பலரையும் குழப்பமடையச் செய்தது.

சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு ராம்சர்

இந்த நிலையில் லோனார் ஏரி சர்வேத அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் பட்டியலில் கொண்டு வரப்பட்டுள்ளது. உலகின் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு 1971 ஆம் ஆண்டு உலக நாடுகளிடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த நிகழ்வானது ஈரானில் உள்ள ராம்சர் நடைபெற்றதன் காரணமாக இந்த சதுப்பு நில பாதுகாப்பு அமைப்புக்கு ராம்சர் என பெயரிடப்பட்டது.

ராம்சர் பட்டியலில் லோனார் ஏரி

லோனார் ஏரி தற்போது சர்வதேச சதுப்பு நில பாதுகாப்பு அமைப்பான ராம்சர் பட்டியலில் இணைக்கப்பட்டுளளது. இதை மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே லோனார் ஏரி ராம்சர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியடையச் செய்கிறது. 2004 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்த ஏரியை பார்த்தேன். தற்போது இந்த ஏரி உலக பல்லுயிர், புவியியல் மற்றும் சுற்றுலாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது என தெரிவித்தார். அதோடு அதில் முதலமைச்சர் உத்தவ்தாக்கரே எடுத்த லோனார் ஏரியின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக