Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 மார்ச், 2025

10-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்


மாசி 26 - திங்கட்கிழமை

🔆 திதி : காலை 10.43 வரை ஏகாதசி பின்பு துவாதசி

🔆 நட்சத்திரம் : அதிகாலை 02.50 வரை புனர்பூசம் பின்பு பூசம்

🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 அதிகாலை 02.50 வரை கேட்டை பின்பு மூலம்

பண்டிகை

🌷 திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

வழிபாடு

🙏 பெருமாளை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 ஏகாதசி

💥 சுபமுகூர்த்தம்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 செடி, கொடி, மரம் நடுவதற்கு உகந்த நாள்.

🌟 கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு ஏற்ற நாள்.

🌟 புதிய உணவுகளை உண்ணுவதற்கு சாதகமான நாள்.

🌟 விவசாய பணிகளை செய்ய சிறந்த நாள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 08.33 AM முதல் 10.18 AM வரை

ரிஷப லக்னம் 10.19 AM முதல் 12.20 PM வரை

மிதுன லக்னம் 12.21 PM முதல் 02.31 PM வரை 

கடக லக்னம் 02.32 PM முதல் 04.40 PM வரை 

சிம்ம லக்னம் 04.41 PM முதல் 06.42 PM வரை 

கன்னி லக்னம் 06.43 PM முதல் 08.42 PM வரை 

துலாம் லக்னம் 08.43 PM முதல் 10.48 PM வரை 

விருச்சிக லக்னம் 10.49 PM முதல் 12.59 AM வரை

தனுசு லக்னம் 01.00 AM முதல் 03.06 AM வரை

மகர லக்னம் 03.07 AM முதல் 05.01 AM வரை

கும்ப லக்னம் 05.02 AM முதல் 06.48 AM வரை

மீன லக்னம் 06.49 AM முதல் 08.29 AM வரை
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
 இன்றைய ‌ராசி பலன்கள்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மேஷம்

சிக்கனத்துடன் செயல்படுவது நெருக்கடிகளை குறைக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புதிய விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். மனதில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான முடிவுகள் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்

அஸ்வினி : நெருக்கடிகள் குறையும். 
பரணி : சிந்தித்துச் செயல்படவும்.
கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்

செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : அனுபவங்கள் ஏற்படும். 
மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும். 
---------------------------------------
மிதுனம்

எதிர்பாராத தனவரவுகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில கவலைகள் விலகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் ஏற்படும். பொன், பொருட்ச்சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : வரவுகள் மேம்படும். 
திருவாதிரை : முதலீடுகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : வாதங்களை குறைக்கவும்.
---------------------------------------
கடகம்

அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். எதிர்கால சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்துச் செயல்படவும். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : ஒத்துழைப்பான நாள்.
பூசம் : ஆதரவான நாள்.
ஆயில்யம் : சிந்தித்துச் செயல்படவும். 
---------------------------------------
சிம்மம்

உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குழந்தைகள் வழியில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் கைகூடும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதுமையான சிந்தனைகள் மூலம் தொழிலில் மாற்றத்தை உருவாக்குவீர்கள். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : பயணங்கள் கைகூடும்.
உத்திரம் : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------
கன்னி

எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் மாற்றங்கள் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் ஆதாயம் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : ஆதரவான நாள்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும். 
சித்திரை : ஆதாயகரமான நாள்.
---------------------------------------
துலாம்

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் உயரதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். திடீர் பயணம் மூலம் புதிய மாற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த இலக்குகளை உருவாக்குவீர்கள். புதிய தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பிரச்சனைகளுக்கு தெளிவுகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : மாற்றம் ஏற்படும்.
விசாகம் : தெளிவுகள் கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்

கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையை ஏற்படுத்தும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் இலாபம் மேம்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கைகள் உருவாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத அலைச்சல் மூலம் புது விதமான அனுபவங்கள் உருவாகும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : இலாபம் மேம்படும்.
கேட்டை : அனுபவங்கள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகப் பணிகளில் விவேகம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : ஆரோக்கியத்தில் கவனம்
பூராடம் : அலைச்சல் உண்டாகும்.
உத்திராடம் : விவேகம் வேண்டும்.
---------------------------------------
மகரம்

மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தக செயல்பாடுகளில் லாபங்கள் மேம்படும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 

உத்திராடம் : காரியங்கள் நிறைவேறும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும். 
---------------------------------------
கும்பம்

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். கால்நடை பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : முடிவுகள் கிடைக்கும். 
பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.
---------------------------------------
மீனம்

கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் வருகை மூலம் புத்துணர்ச்சியான சூழ்நிலை காணப்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புது விதமான சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். இரக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம் 

பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : மேன்மை ஏற்படும்.
ரேவதி : தெளிவுகள் பிறக்கும்.
------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக