நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ சஷ்டி - Mar 04 03:16 PM – Mar 05 12:51 PM
சுக்ல பக்ஷ சப்தமி - Mar 05 12:51 PM – Mar 06 10:51 AM
நட்சத்திரம்
கார்த்திகை - Mar 05 02:37 AM – Mar 06 01:08 AM
ரோஹிணி - Mar 06 01:08 AM – Mar 07 12:05 AM
கரணம்
சைதுளை - Mar 05 02:01 AM – Mar 05 12:51 PM
கரசை - Mar 05 12:51 PM – Mar 05 11:48 PM
வனசை - Mar 05 11:48 PM – Mar 06 10:51 AM
யோகம்
வைத்ருதி - Mar 05 02:06 AM – Mar 05 11:07 PM
விஷ்கம்பம் - Mar 05 11:07 PM – Mar 06 08:29 PM
வாரம்
புதன்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 6:34 AM
சூரியஸ்தமம் - 6:27 PM
சந்திரௌதயம் - Mar 05 10:42 AM
சந்திராஸ்தமனம் - Mar 05 11:41 PM
அசுபமான காலம்
இராகு - 12:31 PM – 2:00 PM
எமகண்டம் - 8:03 AM – 9:33 AM
குளிகை - 11:02 AM – 12:31 PM
துரமுஹுர்த்தம் - 12:07 PM – 12:54 PM
தியாஜ்யம் - 01:52 PM – 03:22 PM
சுபமான காலம்
அமிர்த காலம் - 10:52 PM – 12:22 AM
பிரம்மா முகூர்த்தம் - 04:58 AM – 05:46 AM
ஆனந்ததி யோகம்
ஸித்தி Upto - 01:08 AM
சுபம்
வாரசூலை
சூலம் - North
பரிகாரம் - பால்
சூர்யா ராசி
சூரியன் கும்பம் ராசியில்
சந்திர ராசி
மார்ச் 05, 08:13 AM வரை மேஷம் ராசி, பின்னர் ரிஷபம்
________________________________
புதன் ஹோரை
________________________________
காலை
06:00 - 07:00 - புத - சுபம்
07:00 - 08:00 - சந் - சுபம்
08:00 - 09:00 - சனி - அசுபம்
09:00 - 10:00 - குரு - சுபம்
10:00 - 11:00 - செவ் - அசுபம்
11:00 - 12:00 - சூரி - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சுக் - சுபம்
01:00 - 02:00 - புத - சுபம்
02:00 - 03:00 - சந் - சுபம்
மாலை
03:00 - 04:00 - சனி - அசுபம்
04:00 - 05:00 - குரு - சுபம்
05:00 - 06:00 - செவ் - அசுபம்
06:00 - 07:00 - சூரி - அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
________________________________
இன்றைய ராசி பலன்கள்
________________________________
♈ மேஷம் (Aries)
நெருக்கமான உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நேர்மறை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் நம்பிக்கை மேம்படும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சவாலான வாதங்களையும் சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்
அஸ்வினி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பரணி : நம்பிக்கை மேம்படும்.
கிருத்திகை : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
♉ ரிஷபம் (Taurus)
மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். கல்விப் பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில மாற்றம் உண்டாகும். பிடிவாத குணத்தை குறைத்துக் கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் சார்ந்த செயல்களில் விவேகத்துடன் இருக்கவும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
கிருத்திகை : குழப்பம் நீங்கும்.
ரோகிணி : அனுபவம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
---------------------------------------
♊ மிதுனம் (Gemini)
எதிர்பாராத சில விரயங்கள் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அணுகு முறைகளில் சில மாற்றம் ஏற்படும். அயல்நாட்டு பொருட்கள் மீது ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
மிருகசீரிஷம் : நெருக்கடிகள் நீங்கும்.
திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : தெளிவுகள் ஏற்படும்.
---------------------------------------
♋ கடகம் (Cancer)
எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். வியாபாரப் பணிகளில் லாபங்கள் கிடைக்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடினமான காரியங்களையும் எளிமையான முறையில் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
புனர்பூசம் : தாமதங்கள் குறையும்.
பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ஆயில்யம் : ஆசைகள் நிறைவேறும்.
---------------------------------------
♌ சிம்மம் (Leo)
மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். வேளாண்மை துறைகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். சேவை பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய ஆதரவுகள் கிடைக்கும். வெளியுலக அனுபவம் மூலம் மாற்றங்கள் உருவாகும். பகை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
உத்திரம் : மாற்றங்கள் உருவாகும்.
---------------------------------------
♍ கன்னி (Virgo)
வித்தியாசமான சில சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கடன் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நிர்வாகத் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : குழப்பம் நீங்கும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : கவனம் வேண்டும்.
---------------------------------------
♎ துலாம் (Libra)
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிந்தனைப்போக்கில் கவனம் வேண்டும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகனப் பயணங்களில் நிதானம் அவசியமாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்
சித்திரை : அனுபவம் ஏற்படும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : நிதானம் அவசியம்.
---------------------------------------
♏ விருச்சிகம் (Scorpio)
வாழ்க்கை துணைவரை பற்றிய புரிதல்கள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : புரிதல்கள் மேம்படும்.
அனுஷம் : மேன்மையான நாள்.
கேட்டை : ஆதரவான நாள்.
---------------------------------------
♐ தனுசு (Sagittarius)
தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தந்தைக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். உறுதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
மூலம் : தாமதங்கள் குறையும்.
பூராடம் : உயர்வு கிடைக்கும்.
உத்திராடம் : புரிதல்கள் உண்டாகும்.
---------------------------------------
♑ மகரம் (Capricorn)
பழக்க, வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவோணம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
♒ கும்பம் (Aquarius)
உறவினர்கள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். கால்நடை வளர்ப்பு பற்றிய சிந்தனைகள் உண்டாகும். விவசாயத் துறைகளில் மேன்மை ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
அவிட்டம் : வேறுபாடுகள் குறையும்.
சதயம் : அதிகாரங்கள் மேம்படும்.
பூரட்டாதி : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
♓ மீனம் (Pisces)
சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உருவாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திரட்டாதி : மேன்மையான நாள்.
ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக